PM SHRI KENDRIYA VIDYALAYA
செ.வெ.எண்:-92/2025
நாள்:-30.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் காந்திகிராமத்தில் உள்ள பி.எம்.ஸ்ரீ. கேந்திரிய வித்யாலயாவில் ‘தமிழ் மொழி கற்றல் கருத்தரங்கம்’ கோடை முகாமை மாவட்ட ஆட்சித்தலைவரும், பி.எம்.ஸ்ரீ. கேந்திரிய வித்யாலயா நிர்வாகக் குழுத் தலைவருமான திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
திண்டுக்கல் காந்திகிராமத்தில் உள்ள பி.எம்.ஸ்ரீ. கேந்திரிய வித்யாலயாவில் ‘தமிழ் மொழி கற்றல் கருத்தரங்கம்’ கோடை முகாமை மாவட்ட ஆட்சித்தலைவரும், பி.எம்.ஸ்ரீ. கேந்திரிய வித்யாலயா நிர்வாகக் குழுத் தலைவருமான திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.
முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்போது, “பல்வேறு இந்திய மொழிகளை கற்றுக்கொள்வது, இந்தியாவின் பல்துறை கலாச்சாரங்களை புரிந்துகொள்ளவும், தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கவும் உதவிக்கரமாக இருக்கும். மேலும், தாய்மொழியான தமிழின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அதை மனப்பூர்வமாகக் கற்றுக்கொள்ள வேண்டும், என பேசினார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர், கல்வித் தரம் உயர்த்துதல், கட்டட வசதிகள், பராமரிப்பு மற்றும் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தலைமையாசிரியர் ஸ்ரீராம்குமாருடன் கலந்துரையாடினார். பின்னர் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
வித்யாலயாவின் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், குழந்தைகள் பூங்காவை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தேவையான ஆசிரியர்கள் நியமிக்கவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த ஒரு வார முகாம், இந்திய மொழிகளின் செழுமையான மரபைப் பகிர்ந்து மாணவர்களை அதில் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாணவர்கள் பிராந்திய மொழிகளை அறிந்து கொள்ளும் வாய்ப்பை பெறுவதோடு, கலாசார நுண்ணறிவும் வளர்க்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.