Close

Pollution Control meeting

Publish Date : 22/01/2025
.

செ.வெ.எண்:-40/2025

நாள்:-21.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாபெரும் நெகிழி சேகரிப்பு இயக்கத்திற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாபெரும் நெகிழி சேகரிப்பு இயக்கத்திற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(21.01.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழக அரசின் உத்தரவின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மாதம் ஒருமுறை (நான்காவது சனிக்கிழமை அன்று) நெகிழி சேகரிப்பு இயக்கம் நடைபெற உள்ளது. அதன்படி நடப்பு மாதத்தில் 25.01.2025 அன்று நீர்நிலைகள் மற்றும் குடியிருப்பு, அடுக்குமாடி கட்டடங்களில் உள்ள நெகிழிகளை சுத்தம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் கலந்துக்கொண்டு தங்களது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் திரு.இரா.குணசேகரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.பூ.சு.கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.செ.முருகன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.