PWD(WATER) DRIVER JOB – Notification
செ.வெ.எண்:-08/2025
நாள்:-03.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
பழனி அமராவதி வடிநில வட்டம், கண்காணிப்புப் பொறியாளர் (நீ.வ.து.) அலுவகங்களில் காலியாக உள்ள இரண்டு ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம், நீ.வ.து., அமராவதி வடிநில வட்டம், பழநி கட்டுப்பாட்டிலுள்ள செயற்பொறியாளர், (நீர்வளத்துறை-நீ.வ.து.), நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம் பழனி(திண்டுக்கள் மாவட்டம்) ஆளுகைக்குப்பட்ட உதவி செயற்பொறியாளர், நீ.வ.து., நங்காஞ்சியாறு நீர்த்தேக்க திட்ட உபகோட்டம் எண் 1, திண்டுக்கல் மற்றும் உதவி செயற்பொறியாளர், நீ.வ.து., நங்காஞ்சியாறு நீர்த்தேக்க திட்ட உபகோட்டம் எண். 4, இடையகோட்டை ஆகிய அலுவகங்களில் காலியாக உள்ள இரண்டு(2) ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு (ஊதிய ஏற்ற முறை Level(19500-71900)) தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளது.
இதற்காக வேலைவாய்ப்பக பரிந்துரைக்கும் நபர்கள் தவிர, இதர தகுதியுள்ள நபர்கள் தங்களது ஓட்டுநர் உரிமம், வயது சான்று, கம்வி சான்று, சாதி சான்ற, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், ஓட்டுநர் பணியில் மூன்றாண்டு அனுபவச்சான்று மற்றும் உடற்தகுதிச்சான்று ஆகியவற்றின் சுயசான்றொப்பமிட்ட நகல்களுடன் காணிகாணிப்புப் பொறியாளர், நீ.வ.து., அமராவதி வடிநில வட்டம், பழனி 624 601 என்ற முகவரிக்கு 21.02.2025-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிட விவரம்:- பொதுப்பிரிவினர் (GTGLNon Priority) முன்னுரிமையற்றோர் 1, பிற்படுத்தப்பட்ட வகுப்பினார் (BC GL- Non Prionty)- முன்னுரிமையற்றோர் -01.
ஓட்டுநர் பணிக்கு தகுதிகள்:- கல்வித்தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகனங்களை ஓட்டுவதில் மூன்று வருட முன் அனுபவரம் பெற்றிருக்க வேண்டும். நல்ல உடல் ஆரோக்கியமும், தெளிவான கண் பார்வையும் இருக்க வெண்டும். 01.07.2024 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முன்னுரிமையற்றோர்) 18 வயது நிரம்பியவராகவும், 34 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 18 வயது நிரம்பியவராகவும், 32 வயதிற்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குப் பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது, காலதாமதத்திற்கு துறை நிர்வாகம் பொறுப்பேற்காது, என பழனி அமராவதி வடிநில வட்டம், கண்காணிப்புப் பொறியாளர் (நீ.வ.து.) தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.