RTO Office – Transport – Notification
செ.வெ.எண்:-21/2025
நாள்:-11.02.2025
திண்டுக்கல் மாவட்டம்
புதிய வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழகம் முழுவதும் புதிய வழித்டதடங்களில் சிற்றுந்துகள் இயக்கத்தக்க வகையில், அரசினால் புதிய விரிவான திட்டம்-2024 வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 33 புதிய வழித்தடங்களும், பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்டு 12 புதிய வழித்தடங்களும் ஆக மொத்தம் 45 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறவித்துள்ளார். புதிய வழித்தடங்கள் தொடர்பான விரிவான விபரங்களை திண்டுக்கல் மாவட்ட அரசிதழில் வெளியிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய சிற்றுந்து வழித்தட விபரங்கள் பின்வருமாறு
திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட செம்பட்டி முதல் தோணிமலை, ஏர்போர்ட் நகர் முதல் விராலிப்பட்டி, எம்.எம் கோவிலூர் முதல் வடமதுரை பேருந்து நிறுத்தம், ஆலம்பட்டி முதல் அய்யலூர் பேருந்து நிறுத்தம், காரமடை முதல் மல்லையாபுரம், பூஞ்சோலை முதல் தாடிக்கொம்பு, கோட்டைப்பட்டி பிரிவு முதல் தருமத்துப்பட்டி, வாணிவிலாஸ் முதல் பெருமாள் கோவில், நாகல் நகர் ரவுண்டானா முதல் ராஜக்காபட்டி, வேடசந்தூர் ஆத்துமேடு முதல் சாலையூர் நான்கு ரோடு, வேடசந்தூர் முதல் கூம்பூர், கூம்பூர் முதல் மல்லாபுரம், வேடசந்தூர் முதல் அழகாபுரி, வேடசந்தூர் முதல் வெள்ளையகவுண்டனூர், எரியோடு முதல் அய்யணம்பட்டி, எரியோடு முதல் பூசாரிபட்டி, மல்லபுரம் முதல் புளியம்பட்டி, வேடசந்தூர் முதல் தென்னம்பட்டி, வேடசந்தூர் முதல் வெள்ளம்பட்டி, வத்தலகுண்டு காவல் நிலையம் முதல் அய்யம்பாளையம், நிலக்கோட்டை முதல் கொடைரோடு, காளியம்மன் கோவில் முதல் நிலக்கோட்டை, நிலக்கோட்டை முதல் கொடைரோடு ரயில் நிலையம், நிலக்கோட்டை முதல் விளாம்பட்டி, பெருமாள்மலை முதல் அடுக்கம், நிலக்கோட்டை காவல் நிலையம் முதல் கொக்கபட்டி, நிலக்கோட்டை காவல் நிலையம் முதல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகம், நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முதல் தாதக்காபட்டி, அணைப்பட்டி முதல் விருவீடு காவல் நிலையம், நிலக்கோட்டை முதல் சக்கநாயக்கனூர், நத்தம் முதல் கொட்டாம்பட்டி, நத்தம் முதல் பூதக்குடி பிரிவு, நத்தம் முதல் கோட்டையூர் ஆகிய 33 திண்டுக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட வழிதடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பாப்பம்பட்டி முதல் இரவிமங்கலம், இரவிமங்கலம் முதல் ஆண்டிபட்டி, புதுமனை புதூர் முதல் சண்முகாநதி, கணக்கம்பட்டி முதல் தண்ணீர்தொட்டி, கொழுமங்கொண்டான் முதல் பேச்சிநாயக்கன்பட்டி, நெய்க்காரன்பட்டி PHC முதல் வாய்க்கால்பாலம், நெய்க்காரன்பட்டி பேருந்து நிறுத்தம் முதல் புளியம்பட்டி, கூலசின்னம்பட்டி முதல் CF மருத்துவமனை, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் முதல் குல்லவீரன்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி பேருந்து நிறுத்தம் முதல் பெரியார்நகர், சத்திரபட்டி முதல் தண்ணீர் தொட்டி, காவேரியம்மாபட்டி முதல் காமராஜ் காய்கறி சந்தை வரை ஆகிய 12 பழனி வட்டாரப் போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட வழிதடங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கண்ட 45 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்க விண்ணப்பிக்க விரும்புவோர் வழித்தட விபரத்தினை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் 24.02.2025-க்குள் விண்ணப்பிக்கலாம். ஒரு வழித்தடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் குலுக்கள் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.