Close

Scheme Distribution – Sanarpatti

Publish Date : 14/10/2024
.

செ.வெ.எண்: 23/2024

நாள்:-10.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

சாணார்பட்டியில் 855 பயனாளிகளுக்கு ரூ.43.20 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டியில் 855 பயனாளிகளுக்கு ரூ.43.20 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அய்யாபட்டியில் புதிய நியாயவிலைக் கடை கட்டம் திறப்பு விழா இன்று(10.10.2024) நடைபெற்றது.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்தார்.

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 91 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப்பட்டா ரூ.10.62 இலட்சம் மதிப்பீட்டிலும், புதிய குடும்ப அட்டை400 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல் -முழுப்புலம் 100 பயனாளிகளுக்கும், பட்டா மாறுதல்-உட்பிரிவு 122 பயனாளிகளுக்கும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உழவர் அட்டை 45 பயனாளிகளுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில் சுயஉதவிக்குழு மானியக்கடன் 85 பயனாளிகளுக்கு ரூ.25.95 இலட்சம் மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.6.15 இலட்சம் மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பீட்டிலும் என 91 பயனாளிகளுக்கு ரூ.10.62 இலட்சம் மதிப்பீட்டிலான விலையில்லா வீட்டுமனைப்பட்டா மற்றும் 764 பயனாளிகளுக்கு ரூ.32.58 மதிப்பீட்டிலான அரசின் பல்வெறு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் 855 பயனாளிகளுக்கு ரூ.43.20 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.சு.ஜெயசித்ரகலா, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் திருமதி மீனாதேவி, பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.