Science Festival
செ.வெ.எண்:-24/2025
நாள்:-07.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் மாநில அளவிலான ‘அறிவியல் திருவிழா’ 19.01.2026 முதல் 25.01.2026 வரை நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
அறிவியல் வளர்ச்சியை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பேரா.நாகராஜன் நினைவாக “அறிவியல் திருவிழா 2026” திண்டுக்கல் எம்.எஸ்.பி.மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் 19.01.2025 முதல் 25.01.2026 வரை 7 நாட்கள் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மட்டுமல்லாமல் அறிவியல் ஆர்வம் கொண்ட பிற மாவட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், தொழில்முனைவோர், வல்லுநர்கள், பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொள்ளக் கூடிய ஏழு நாள் திருவிழாவாக இது அமையவுள்ளது. இத்திருவிழாவின் கருப்பொருளாக அறிவியல், தொழில்நுட்பம், புதுத்தொழில், தொழில்முனைவு ஆகியவை உள்ளன. இக்கருப்பொருளினைக் கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் அறிவியல் தொடர்பான விழிப்புணர்வையும், புதிய அறிவியல் அறிஞர்களையும், தொழில் வளர்ச்சியையும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
இதன் பொருட்டு, மாணவ/மாணவியருக்கான இலச்சினை வடிவமைப்புடன் வாசகம் எழுதும் போட்டி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள கருப்பொருளையும் திண்டுக்கல்லையும் உணர்த்தும் வகையில் வண்ண இலச்சினையையும், அதன் கீழே விழாவிற்கான சாரத்தைச் சொல்லும் வாசகத்தையும் உருவாக்கி போட்டியில் கலந்துகொள்ள மாணவ/மாணவியரை அழைக்கிறோம். உங்கள் வடிவமைப்பினை profnagarajansciencefest@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். வடிவமைப்புகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 22.07.2025. படைப்புகளை svg அல்லது jpg வடிவில் மட்டுமே அனுப்ப வேண்டும். மேலும் விபரங்களுக்கு 7397255808 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.