Close

shg Loan meeting

Publish Date : 08/08/2025
.

செ.வெ.எண்:-29/2025

நாள்: 06.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

91 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8.16 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடனுதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கி கடன் இணைப்பு முகாம் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திலுள்ள மக்கள் குறை தீர்க்கும் கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 14 ஒன்றியங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் திரு.செ.சரவணன்இ இ.ஆ.ப.இ அவர்களின் தலைமையில் நடந்த இம்முகாமில் 91 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.8 கோடியே 16 இலட்சம் வங்கி கடன் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் செய்ய வழிவகை செய்யப்பட்டது. இம்முகாமில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி பார்த்திபன், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.சா.சதீஸ்பாபு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் திருமதி.சுபாஷினி, உதவி பொது மேலாளர் திரு.சுகுமார், உதவித் திட்ட அலுவலர்; (ஊரகம்) திரு.வெற்றிச்செல்வன் மற்றும் உதவித் திட்ட அலுவலர் (நகர்ப்புறம்) திருமதி.ஜீவரம்யா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.