SIPCOT Biz buddy meeting
செ.வெ.எண்:-27/2023
நாள்:10.10.2024
திண்டுக்கல் மாவட்டம்
நிலக்கோட்டை சிப்காட் திட்ட அலுவலகத்தில் “சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு” கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை சிப்காட் திட்ட அலுவலகத்தில் “சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு” கூட்டம் சிப்காட் மேலாளர் திருமதி அ.ஜெயந்தி தலைமையில் இன்று(10.10.2024) நடைபெற்றது.
தமிழக அரசின், சிப்காட் பூங்காக்களில் தொழில் உள்ள தொழிற்சாலைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் “சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு” கூட்டம் நடைபெற்றது. சிப்காட் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவித்து, தீர்வு கண்டு பயன்பெற்றனர்.
இக்கூட்டத்தில், நிலக்கோட்டை சிப்காட் திட்ட அலுவலர் திரு.சீ.கண்ணன், சிப்காட் தலைமை அலுவலக ஆலோசகர் திரு.வ.விசுவநாதன், சிப்காட் தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.