Sparsh Pension Grievance meeting
செ.வெ.எண்:-25/2025
நாள்:-07.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ்(SPARSH) ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ்(SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(07.07.2025) நடைபெற்றது.
திருச்சியில் 30.06.2025 அன்று நடைபெற்ற மாபெரும் SPARSH ஓய்வூதிய குறை தீர்ப்பு முகாமில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் சார்ந்த குறைகளுக்கு தீர்வு காண ஐந்து SPARSH ஓய்வூதிய சேவை வாகனங்களை துவக்கி வைக்கப்பட்டது.
இதன் ஒருபகுதியாக, இன்று (07.07.2025) திண்டுக்கல் மாவட்டத்திற்கு SPARSH ஓய்வூதிய சேவை வாகனம் வந்தடைந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாமில் 120-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டனர். முன்னாள் படைவீரர் நல அலுவலகம் மற்றும் மத்திய பாதுகாப்பு அலுவலர்கள் பங்கேற்றனர்.
முன்னாள் படைவீரர்களின் இறப்பிற்கு பின்பு அவர்களின் மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் 15 நாட்களில் குடும்ப ஓய்வூதிய ஆணை வழங்கப்படும் என தெரிவித்தார்.
ராணுவத்தில் பணிபுரிந்த தனது கணவரின் இறப்பிற்குப் பிறகு குடும்ப ஓய்வூதியம் பெறாமல் இருந்த திருமதி.மணி அவர்களுக்கு இம்முகாமில் கலந்து கொண்டு தனது குறைகளை தெரிவித்தார். அவரின் மனு மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடியாக குடும்ப ஓய்வூதிய ஆணை பிறப்பிக்கப்பட்டு, அவரது குடும்ப ஓய்வூதியம் ரூ.12,856/- க்கான குடும்ப ஓய்வூதிய ஆணையை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.C.வினோதினி,இ.ஆ.ப., பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை பாதுகாப்பு கட்டுப்பாட்டு அலுவலர் சங்கீதா, இ.பா.ஆ.ப., உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.