Close

Sport Dept Competition

Publish Date : 28/08/2025
.

செ.வெ.எண்:-103/2025

நாள்:-26.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 2025-26 மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(26.08.2025) துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 25,177 பள்ளி மாணவர்களும், 26,852 பள்ளி மாணவிகளும். 2,542 கல்லூரி மாணவர்களும், 2,605 கல்லூரி மாணவிகளும், 334 மாற்றுத்திறனாளி ஆண்களும், 193 மாற்றுத்திறனாளி பெண்களும், 1,336 பொதுமக்கள் ஆண்களும், 309 பொதுமக்கள் பெண்களும், 1768 அரசு அலுவலர்கள் ஆண்களும், 1684 அரசு அலுவலர்கள் பெண்களும் என மொத்தம் 62,800 நபர்கள் 26.08.2025 வரை இணையவழியில் பதிவு செய்துள்ளார்கள்.

இன்றையதினம்(26.08.2025) பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபாடி மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகளும் நடைபெற்றது. இதில் சுமார் 1600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள். 28-08-2025 அன்று பள்ளி பிரிவு கேரம், (மாணவ, மாணவிகள் ஸ்ரீவாசவி மெட்ரிக் பள்ளி) கல்லூரி இறகுப்பந்து,(மாணவர்கள்) கூடைப்பந்து (மாணவர்கள், மாணவிகள்) கிரிக்கெட் (மாணவர்கள்) காபடி (மாணவர்கள்) ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளைாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு. சிவா அவர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு. சவுடமுத்து மற்றும் அனைத்து விளையாட்டு கழக பிரநிதிகள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.