Close

SPORTS DEPT

Publish Date : 18/11/2025

செ.வெ.எண்:-74/2025

நாள்:-17.11.2025

பத்திரிகை செய்தி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு யோகா பெண் பயிற்றுநர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளது. ரூ. 10,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

பயிற்றுநருக்க விண்ணப்பிக்க தகுதியானவர்கள் :

• திண்டுக்கல் மாவட்டத்தை சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்

• Bachelor of Yoga and Natural Sciences / Diploma in Yoga and Natural Sciences Certificate issued by the recognized University in Tamilnadu,

மேற்காணும்படி பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சுயவிபரக் குறிப்பினை (Bio-data ) நேரடியாக மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.11.2025-அன்று மாலை 5.00 மணி வரை.

விண்ணப்பதாரர்களுக்கான நேர்முகத் தேர்வு 20.11.2025-அன்று காலை 10.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும்.

மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், தாடிக்கொம்புரோடு, திண்டுக்கல் என்ற முகவரியில் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டரங்க அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டும், மாவட்ட விளையாட்டரங்க அலுவலக தொலைபேசி எண். 74017 03504-க்கு தொடர்பு கொண்டும் தகவலினை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.