Sports-Tenzing Norgey Award
செ.வெ.எண்:-94/2025
நாள்:-25.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
டென்சிங் நார்கே தேசிய சாகச விருது-2024 பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
இந்திய அரசின் சார்பில் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி 2024-ஆம் ஆண்டிற்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும், சாகச துறைகளில் உள்ள நபர்களின் சாதனைகளை அங்கீகரித்திடும் வகையில் இளம் வயதில் வீர, தீர செயல்புரிந்தவர்கள், அதாவது மூன்று நிலைகளில் நிலம், கடல் மற்றும் வான் ஆகியவற்றில் சாதனைகள் புரிந்த நபர்கள் இந்த விருது பெற தகுதியுடையவர்கள்.
இவ்விருதிற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் இதர விவரங்களை https://awards.gov.in, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 30.06.2025-ஆம் தேதி மாலை 3.00 மணி ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவம் மற்றும் உரிய ஆவணங்களை (3 எண்ணம்) ‘மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல்- 624004“ என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 0451-2461162 வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர், திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.