Close

Srilankan Tamil – Notification

Publish Date : 14/12/2024

செ.வெ.எண்:-35/2024

நாள்:-12.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

திண்டுக்கல் மாவட்டத்தில், பர்மா மற்றும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர்களுக்கு வழங்கப்பட்ட வீட்டு கடன்களுக்கு அடமானம் செய்யப்பட்ட நில ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் மற்றும் பிற ஆவணங்கள் அனைத்தையும் அவற்றில் உள்ள கடன் வழங்கப்பட்டது தொடர்பாக விவரங்கள் அனைத்தையும் நீக்கி விட்டு, சம்பந்தப்பட்ட தாயகம் திரும்பியோர்களிடம் அனைத்து ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க அரசு அறிவுரை வழங்கியுள்ளதால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாயகம் திரும்பியோர்களான சம்பந்தப்பட்ட பயனாளிகள் தகுந்த ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (R1 பிரிவு – முதல் தளம்) அல்லது பயனாளிகள் கடன் பெற்ற சார் ஆட்சியர் / வருவாய் கோட்ட அலுவலர்(RDO) அலுவலகத்தினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.