Sweepers Grievance Day
செ.வெ.எண்:- 36/2025
நாள்:-09.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம், கோரிக்கை மனுக்களோடு கும்பல் கும்பலாக மாவட்ட ஆட்சித் தலைவரை நேரடியாக பார்க்கப் போகிறோம் என்ற மனமகிழ்ச்சியுடன் காத்திருந்த தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பள்ளி சுகாதார பணியாளர்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்களின் சிறப்பு முயற்சியாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணிபுரியக்கூடிய துப்புரவு பணியாளர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு குறைதீர்ப்பு கூட்டத்தில் 1,213 மனுக்கள் பெறப்பட்டது.
தினசரி அதிகாலையில் 7.00 மணிக்கு குப்பை அள்ளும் வேலையை தொடங்கும் இத்தொழியாளர்களின் குறையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தீர்த்து வைத்துள்ளார்கள்.
தூய்மை காவலர்கள் கோடை காலத்தில் களைப்பின்றி வேலை செய்ய நீர் மோர், குளிர்பானம் தர்பூசணி போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், பள்ளி சுகாதாரப் பணியாளர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம், தூய்மை பணியாளர் நல வாரிய உறுப்பினர் அட்டை பெறுதல், ஹெல்த் கார்டு மூலம் பயனடையச் செய்தல். பட்டா தேவைப்படும் தொழிலாளர்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஏற்பாடு, பட்டா மாறுதல், புதிய வீடு கட்டி கொடுத்தல், ஏற்கனவே உள்ள வீடுகளை மராமத்து பார்த்தல் உள்ளிட்ட துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒருமுகப்படுத்தும் விதமாக இன்றைய நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்தது. 1,213-கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
தூய்மை காவலர்களின் சமூக, பொருளாதார பாதுகாப்பிற்கும் சமூக நீதியை பார்ப்பதற்கும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டதிற்குரியது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் இப்பணிகள் மென்மேலும் சிறக்க திண்டுக்கல் மக்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு குறைதீர் நாள் கூட்டத்தில் கிடைத்த அனுபவங்களையும் தூய்மை காவலர்கள், துப்புரவு தொழிலாளர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மனுக்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணும் வகையிலும் புதிய கோரிக்கைகளை பெரும் வகையிலும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அளவில் சிறப்பு குறைதீர் முகாம்கள் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் கருத்து அனைவரின் வரவேற்பையும் தொழிலாளருக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைந்திருந்தது.v
இச் சிறப்பு குறைதீர் நாள் முகாமில் பெரும்பாலானோர் பட்டா வழங்க கோரியும் பட்டா மாறுதல் செய்து தரகோரியும் புதிய வீடுகள் கட்டுதல் மற்றும் வீடுகளை மாராமத்து செய்திடவும் சம்பள உயர்வு வழங்குதல் தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்நிகழ்வின் போது ஒரு நபருக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான காப்பீட்டு அட்டையும், ஒரு நபருக்கு சுயதொழில் செய்வதற்கான தையல் இயந்திரமும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திரு.மு.கோட்டைக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு.ம.சுந்தரமகாலிங்கம், தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) திரு.க.செந்தில்வேல் உதவி திட்ட அலுவலர் உட்கட்டமைப்பு, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, தாட்கோ, மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.