மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இ-பாஸ்

வெளியிடப்பட்ட நாள்: 18/09/2020

செ.வெ.எண்:-16/2020 நாள்:17.09.2020 திண்டுக்கல் மாவட்டம் பொது போக்குவரத்தில் கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இ-பாஸ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற போக்குவரத்துகளில் பயணம் மேற்கொள்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல். கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கொரோனா வைரஸ் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பத்ம விருது 2021

வெளியிடப்பட்ட நாள்: 15/09/2020

செ.வெ.எண்:- 09/2020 நாள்:-13.09.2020 திண்டுக்கல் மாவட்டம் “பத்ம விருது” 2021-ஆம் ஆண்டு பன்முகத் திறமைக்கான கலை,இலக்கியம்,கல்வி,விளையாட்டு,மருத்துவம்,அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பாக அளப்பரிய சாதனை புரிந்தவர்கள் விருதை பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப.,அவர்கள் தகவல். பன்முகத் திறமைக்காண விருதான “பத்ம விருது” 2021-ஆம் ஆண்டிற்கு கலை,இலக்கியம்,கல்வி,விளையாட்டு, மருத்துவம்,அறிவியல் மற்றும் பொறியியல் தொடர்பாக அளப்பரிய சாதனை புரிந்தவர்களுக்கு 26.01.2021-ஆம் ஆண்டு நாளன்று கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் மாநில அளவில் விருது வழங்கப்படவுள்ளது. மேற்படி […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 08/09/2020

செ.வெ.எண்:-06/2020 நாள்:08.09.2020 திண்டுக்கல் மாவட்டம் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) சேர இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். 2020-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும் அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் முறை […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் சேவை திட்டத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2020

செ.வெ.எண்:-20/2020 நாள்:- 21.08.2020 திண்டுக்கல் மாவட்டம் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் செயல்படுத்தப்படும் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் சேவை திட்டத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு 26.08.2020-ஆம் தேதி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் மாவட்டத்தில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தமிழ்நாடு கிளை சார்பில் இலவச அமரர் ஊர்தி சேவை மற்றும் இலவச தாய்சேய் சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தந்தை பெரியார் விருது

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2020

செ.வெ.எண்:-21/2020 நாள்:- 22.08.2020 திண்டுக்கல் மாவட்டம் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ரூ.1,00,000/- (ரூபாய் ஒரு இலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2020-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) ஐ.டி.ஐ., மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2020

செ.வெ.எண்:-13/2020 நாள்:19.08.2020 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) ஐ.டி.ஐ., மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் நடைபெறும் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். திண்டுக்கல் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில்(மகளிர்) ஐ.டி.ஐ., மகளிர்க்கான தொழிற்பிரிவுகளில் மாநில கலந்தாய்வு மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. NCVT சான்றிதழ் தொழிற்பிரிவுகளான கம்மியர் கருவிகள்(Instrument Mechanic) 2 ஆண்டுகள் படிப்பு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் சாதனங்கள் பராமரிப்பு […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.

வெளியிடப்பட்ட நாள்: 21/08/2020

செ.வெ.எண்:-14/2020 நாள்:19.08.2020 திண்டுக்கல் மாவட்டம் 108 ஆம்புலன்சில் பணியாற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்களுக்கு நடைபெறும் ஆட்கள் தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். தமிழகத்தில் 950-க்கும் மேற்பட்ட 108 ஆம்பலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மருத்துவ உதவியாளர் பணிக்கு 18 வயதிற்கு மேலும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். பி.எஸ்.சி. நர்சிங் மற்றும் டி.ஜி.என்.எம்., பி.எஸ்.சி., எம்.எஸ்.சி., லைப் சயின்ஸ் […]

மேலும் பல
photo1

திண்டுக்கல் மாவட்டம்-74-வது சுதந்திர தினவிழா

வெளியிடப்பட்ட நாள்: 18/08/2020

செ.வெ.எண்:- 07/2020 நாள்:- 15.08.2020 திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 74-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று(15.08.2020) 74-வது சுதந்திர தினவிழா சமூக இடைவெளியை பின்பற்றி கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு -மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

வெளியிடப்பட்ட நாள்: 13/08/2020

செ.வெ.எண்:-04/2020 நாள்:12.08.2020 திண்டுக்கல் மாவட்டம் தனியார் துறை நிறுவனங்களில் வேலை பெற விரும்பும் வேலை நாடுநர்கள்; www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப, அவர்கள் தகவல். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால், தனியார்துறைகளில் வேலைவாய்ப்பினை ஊக்குவிக்கும் நோக்கத்தில் தனியார் துறை வேலை இணையம் (Tamil Nadu Private Job portal) என்ற இணையதளம் 16.06.2020 இல் துவக்கி வைக்கப்பட்டது. இதற்கான இணையதள முகவரி www.tnprivatejobs.tn.gov.in ஆகும். தனியார் […]

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் விதிமுறைகளுக்குட்பட்டு பயிற்சி மேற்கொள்ளலாம்

வெளியிடப்பட்ட நாள்: 28/07/2020

செ.வெ.எண்:-26/2020 நாள்:28.07.2020 திண்டுக்கல் மாவட்டம் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் விதிமுறைகளுக்குட்பட்டு பயிற்சி மேற்கொள்ளலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மு.விஜயலட்சுமி, இ.ஆ.ப., அவர்கள் தகவல். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் பயிற்சி மேற்கொண்டு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் கலந்து பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பொருட்டு அரசு விதிமுறைகளுடன் ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், […]

மேலும் பல