மூடு

ஊடக வெளியீடுகள்

Filter by:

வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி.

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

வாக்குப் பதிவு அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் சட்டமன்ற தொகுதி வாரியாக எதிர் வரும் 11.04.2026 (சனிக்கிழமை) அன்று பின்வரும் பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. [PDF 70KB]

மேலும் பல

மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் போட்டி.

வெளியிடப்பட்ட நாள்: 08/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, பொதுமக்களிடையே 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) மரு.ச.வினோதினி, இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.[PDF 77KB]

மேலும் பல

பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(06.04.2026) வரையில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 57KB]

மேலும் பல

7 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள்

வெளியிடப்பட்ட நாள்: 07/04/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் 30.03.2026 முதல் வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, 30.03.2026 முதல் 06.04.2026 (இன்று) வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விபரம் பின்வருமாறு. [PDF 77KB]

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 – 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவர்களுக்காக ஒரு சுவர் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக சுற்றுச்சுவர்களில் சுற்றுச்சூழல் மற்றும் 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 10 கல்லூரிகளைச் சேர்ந்த 40 மாணவ, மாணவியர்களுக்கு சுவர் ஓவியப் போட்டி நடைபெற்றது. [PDF 64KB]

மேலும் பல

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – முதல்முறை வாக்காளர்களுக்காக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, பாளையங்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சி.எஸ்.ஐ.அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளியில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு முதல் தலைமுறை வாக்காளர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்களிப்பது குறித்து நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். [PDF 74KB] . .

மேலும் பல

பெற்றோர்கள் கோடை விடுமுறை நாட்களில் குழந்தைகள் பாதுகாப்பற்ற நீர் நிலைகளுக்கு செல்வதை தடுத்திட வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026

கோடை விடுமுறையின் போது, ​​பாதுகாப்பற்ற நீர்நிலைகளுக்குச் செல்வதிலிருந்து குழந்தைகள் தடுக்கப்பட வேண்டும். [PDF 57KB]

மேலும் பல

சட்டமன்றத் தேர்தல் – பெறப்பட்ட வேட்புமனு விவரங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 05/04/2026

30.03.2026 முதல் 04.04.2026 வரையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விபரம் [PDF 77KB]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அதிகாரி எண்ணிக்கை மையத்தை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.04.2026) வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ள முத்தனம்பட்டி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். [PDF 67 KB]

மேலும் பல

03.04.2026 அன்று பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் பறிமுதல் விவரம்.

வெளியிடப்பட்ட நாள்: 04/04/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(03.04.2026) தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு. [PDF 59 KB]

மேலும் பல

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரி திடீர் ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளிலும் பறக்கும் படை (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினர் (SST) இரவில் தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணிகள் குறித்து இன்று (03.04.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.பிரதீப், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நேரில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். [PDF 67 KB]

மேலும் பல

பறக்கும் படையினரால் மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் கைப்பற்றிய விவரங்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

ண்டுக்கல் மாவட்டத்தில் இன்று(02.04.2026) தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம் பின்வருமாறு.[PDF 58KB]

மேலும் பல

திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்றத் தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விவரங்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் பெறும் பணிகள் 30.03.2026 அன்று தொடங்கியது. அதன்படி, இன்று (02.04.2026) வரையிலாக திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டமன்ற தொகுதிகளில் பெறப்பட்ட மொத்த வேட்பு மனுக்களின் விவரங்கள் பின்வருமாறு உள்ளன.[PDF 76KB]

மேலும் பல

தேர்தல் ஆணையம் தேர்தல் கண்காணிப்பாளரை மாற்றியுள்ளதை அறிவித்துள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

திண்டுக்கல் மாவட்டம் 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி மற்றும் 133-வேதசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான நியமிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பாளர்கள் மாற்றத்தின் விவரங்கள்[PDF 53KB]

மேலும் பல

ஊதியத்துடன் கூடிய விடுப்பு: 135B பிரிவு கீழ் தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளில் 100% வாக்குப்பதிவு உறுதி செய்ய.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும், கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்குரிமை உள்ள தினக்கூலி, தற்காலிக மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, 09.04.2026 தேர்தல் நாளில் அவர்களது சொந்த தொகுதியில் சென்று வாக்களிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 135B–ன் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமையாளர்கள் […]

மேலும் பல

தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 03/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு (Slender Loris) பாதுகாப்பு மையத்தில், முதல் தலைமுறை கல்லூரி மாணவர் வாக்காளர்களிடம் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் இன்று (02.04.2026) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதவி ஆட்சியர் (பயிற்சி) டாக்டர் ச. வினோதினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.[PDF 70KB]

மேலும் பல

தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடர்பான கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026- பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் மற்றும் கேஸ் சிலிண்டர் விற்பனையாளர் ஆகியோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான கூட்டம்.[PDF 414 KB]

மேலும் பல

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்குச்சாவடி ஆய்வு.

வெளியிடப்பட்ட நாள்: 02/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 132-திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.[PDF 63 KB]    

மேலும் பல

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – தேர்தல் தொடர்பாக நடந்து வரும் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – தேர்தல் தொடர்பாக நடந்து வரும் செலவினங்கள் குறித்த ஆய்வு கூட்டம். [PDF 413 KB]

மேலும் பல

பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம். [PDF 58 KB]

மேலும் பல

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(மகளிர் திட்டம்).

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியபட்டி திருநங்கையர் காலனியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. [PDF 65 KB]

மேலும் பல

பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம். [PDF 58 KB]

மேலும் பல

திண்டுக்கல் 7 தொகுதிகளுக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – திண்டுக்கல் மாவட்டத்தின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான பெறப்பட்ட வேட்பு மனுக்கள். [PDF 74 KB]

மேலும் பல

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(மகளிர் திட்டம்)

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 85 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்களால் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். [PDF 77 KB]    

மேலும் பல

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி.

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று (30.03.2026) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. [PDF 78 KB]  

மேலும் பல

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில்,100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி 2,100-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கலந்து கொண்ட தேர்தல் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.   [PDF 74 KB]

மேலும் பல

பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம். [PDF 137 KB]

மேலும் பல

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – மது விற்பனைக்கு தடை.

வெளியிடப்பட்ட நாள்: 30/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – மது விற்பனைக்கு தடை. [PDF 53 KB]

மேலும் பல

முதல் கட்டப் பயிற்சி மாவட்டத் தேர்தல் அலுவலரால் ஆய்வு செய்யப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, 128-ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிறிஸ்டியன் பொறியியல் கல்லூரியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள்(1), வாக்குச்சாவடி அலுவலர்கள்(2), வாக்குச்சாவடி அலுவலர்கள்(3) ஆகியோர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இயக்குதல் மற்றும் வாக்குப்பதிவு மையத்தில் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து நடைபெற்று வரும் முதற்கட்ட பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். <[PDF 77 KB]   […]

மேலும் பல

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் – SVEEP விழிப்புணர்வு.

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை ஒட்டி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். [PDF 69 KB]  

மேலும் பல

SVEEP விழிப்புணர்வு 2026.

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

தோட்டக்கலைத்துறை சார்பில், 20 வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு DINDU என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட தேவாங்கு விழிப்புணர்வு இலச்சினையை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். [PDF 78 KB]    

மேலும் பல

மது விற்பனைக்கு தடை.

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

மாகாவீர் ஜெயந்தி தினம் – மது விற்பனைக்கு தடை. [PDF 45 KB]

மேலும் பல

பறிமுதல் விவரங்கள் – பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – பறக்கும் படையினரால் (FST) மற்றும் நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினரால் (SST) பறிமுதல் செய்யப்பட்ட விவரம். [PDF 55 KB]

மேலும் பல

வேட்புமனுத் தாக்கல் குறித்த விவரங்கள்.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வேட்புமனுத் தாக்கல் குறித்த விவரங்கள். [PDF 47 KB]

மேலும் பல

சட்டமன்ற தொகுதிகளுக்கு EVMகள் வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாவட்டத் தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியரின் தலைமையில், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கப்பட்டன. [PDF 66 KB]

மேலும் பல

வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள்.(கூட்டுறவு அங்காடிகள்).

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு,திண்டுக்கல் ஆர்.எம்.காலனியில் உள்ள பாண்டியன் நகர் கூட்டுறவு பண்டகசாலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,381 கூட்டுறவு பண்டகசாலைகளில் தேர்தல் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர்கள் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். [PDF 72 KB]  

மேலும் பல

மாவட்ட தேர்தல் அதிகாரி நத்தம் தொகுதியில் வாக்குப்பதிவு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

131-நத்தம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோதனைச்சாவடிகள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். [PDF 66 KB]  

மேலும் பல

திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் பரளிபுதூர் சோதனைச் சாவடியை ஆய்வு செய்தனர்.

வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, திண்டுக்கல்–மதுரை எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பரளிபுதூர் சோதனைச் சாவடியை திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. செ. சரவணன், இ.ஆ.ப., மற்றும் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.ஜே. பிரவீன் குமார், இ.ஆ.ப., ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். [PDF 61KB]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அதிகாரி EVM மற்றும் VVPAT அனுப்பப்படுவதை ஆய்வு செய்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT-கள் அனுப்பப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்தார். [PDF 66KB]      

மேலும் பல

தேர்தல் தொடர்பான புகார் விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026)- அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பான புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்கும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. [PDF 54 KB]

மேலும் பல

மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த வாக்காளர்களுக்கான கண்காணிப்பு அலுவலர் நியமனம்.

வெளியிடப்பட்ட நாள்: 25/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) 15.03.2026-ம் அன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதற்கு போதிய வசதிகள் செய்து கொடுப்பதற்கு மாவட்ட அளவில் கண்காணிப்பு அலுவலர் மற்றும் உதவி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். [PDF 51 KB]

மேலும் பல

SVEEP விழிப்புணர்வு பிரச்சாரம்.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – 100% வாக்காளர் வருகையை ஊக்குவிப்பதற்காக, மாவட்டத் தேர்தல் அதிகாரி /மாவட்ட ஆட்சித் தலைவர் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து, எரிவாயு உருளைகளில் தேர்தல் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். [PDF 73 KB]

மேலும் பல

வாக்குப்பதிவு பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 – வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்புகள். [PDF 74 KB]

மேலும் பல

கையொப்பம் மற்றும் சுய படம் எடுத்துக்கொள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வைக்கப்பட்ட உறுதிமொழி பதாகையில் கையெழுத்து இட்டும், தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான சுய படம் எடுத்துக்கொள்ளும் (Selfie Stand – செல்ஃபி ஸ்டாண்ட்) விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் துவக்கி வைத்தார். [PDF 68 KB]  

மேலும் பல

ஏழு தொகுதிகளுக்கான EVM மற்றும் VVPAT முதல் ரேண்டமைசேஷன் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 24/03/2026

7 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மற்றும் VVPAT-களுக்கான முதல்முறை குலுக்கல் தேர்வு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில், மாவட்டத் தேர்தல் அலுவலர் (DEO) மற்றும் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் இன்று (23.3.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. [PDF 80 KB]

மேலும் பல

மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு படிவம் 12-D வழங்கப்பட்டது.

வெளியிடப்பட்ட நாள்: 23/03/2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026 – மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்குப் படிவம் 12-D விநியோகம். [PDF 126 KB]

மேலும் பல

மாவட்ட தேர்தல் அதிகாரி அஞ்சல் வாக்குப்பத்திரங்களை கையாள்வது தொடர்பான பயிற்சி.

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026

திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் இன்று (21.03.2026) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக NIC கூட்ட அரங்கில் பயிற்சி வகுப்பு மற்றும் அஞ்சல் வாக்கு பெறுவது குறித்த ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. [PDF 46 KB]

மேலும் பல

ஏழு சட்டமன்ற தொகுதிகளில் 2301 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட நாள்: 22/03/2026

இந்தியத் தேர்தல் ஆணையத்தால், தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 நடைபெறுவது குறித்த கால அட்டவணை (Announcement of Election) (15.03.2026) அன்று வெளியிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 2301 (முதன்மை வாக்குச்சாவடிகள் 2301) வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.[PDF 37 KB]

மேலும் பல