TAHDCO – JEE Mains
செ.வெ.எண்:-65/2025
நாள்: 24.03.2025
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) வாயிலாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கான(JEE Mains) பயிற்சியில் சேர இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் தேர்வில்(JEE Mains) தேர்ச்சி பெற பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்கள் 65 சதவீதம் மதிப்பெண் பெற்றியிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.4.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கி பயிலவும், உணவு மற்றும் தங்கும் இடத்திற்குக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கி பயில பயிற்சிக்கான தொகையினை சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் கடந்த ஆண்டில் 30 மாணவர்கள் தங்கி பயின்றதில் 26 மாணவர்கள் தேர்ச்சி பெற்று ஐஐடி(IIT), என்ஐடி(NIT) போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேர தகுதி பெற்றுவுள்ளார்கள்.
இப்பயிற்சியினை பெற தகுதியுள்ள திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து, பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.