TamilNadu Pollution Control Board – Plastic Manufactory – Seal
செ.வெ.எண்:-07/2024
நாள்:-07.05.2024
திண்டுக்கல் மாவட்டம்
தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், சாலையூர் என்எஸ் நகர் பகுதியில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய அதிகாரிகள் இன்று(07.05.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பைகளை தயாரிக்கும் நிறுவனம் சாலையூர் என்எஸ் நகரில் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த நிறுவனத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
மேலும் அந்நிறுவனத்தின் மின் இணைப்பை துண்டிப்பதற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடுவாரிய தலைமை அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.