Close

tamilvalar – Competition

Publish Date : 07/07/2025

செ.வெ.எண்:-16/2025

நாள்:-04.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

“தமிழ்நாடு நாள்“ கொண்டாடுவது தொடர்பில் பள்ளி மாணவ, மாணவிகளிடையே கட்டுரை, பேச்சுப் போட்டிகள் 10.07.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினையே “தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும் என்பதை தெரிவிக்கும் வகையில் “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இவ்வறிவிப்பிற்கிணங்க நடப்பு நிதியாண்டில்(2025-26) தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு“ எனப் பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய சூலை 18ஆம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பெற வேண்டுமென தமிழ் வளர்ச்சி இயக்குநர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் 10.07.2025(வியாழக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் திண்டுக்கல், எம்.எஸ்.பி. சோலை நாடார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரைப் போட்டி “1) ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம் 2) பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி” என்ற தலைப்புகளிலும், பேச்சுப் போட்டி ”1) கடமை, கண்ணியம், கட்டுப்பாடு 2) அன்னைத் தமிழே ஆட்சிமொழி 3) தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர் 4) அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு 5) ஆட்சிமொழி விளக்கம், 6) தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகிழ்வு 7) ஆட்சிமொழி – சங்க காலம் தொட்டு 8) இக்காலத்தில் ஆட்சிமொழி” ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படும்.

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பள்ளி மாணவர்கள், அவர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் உரிய படிவத்தில் பரிந்துரை பெற்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும். முதற்கட்டமாக கீழ் நிலையில் போட்டிகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் பரிந்துரைக்கப்பெறும் மாணவர்கள் மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் கலந்துகொள்ளலாம். இப்போட்டிகள் தொடர்பில் கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு 0451- 2461585 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளபில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7000, மூன்றாம் பரிசு ரூ.5000 என்ற வகையில் காசோலைப் பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன, என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.