Close

Tasmac closed-Vallalar Ninaivu day

Publish Date : 06/02/2025

செ.வெ.எண்:-08/2025

நாள்:-06.02.2025

திண்டுக்கல் மாவட்டம்

வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு 11.02.2025 அன்று மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) சட்டம் 1981-ன் கீழ் உரிமம் பெற்று இயங்கி வரும் எப்.எல்.1 உரிமம் பெற்ற டாஸ்மாக் சில்லரை விற்பனை மதுக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ, எப்.எல்.3ஏஏ மற்றும் எப்.எல்.11 உரிமம் பெற்ற உரிமத்தலங்கள் அனைத்தும், 11.02.2025 (செவ்வாய்க்கிழமை) வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு மூடப்பட்டிருக்கும்.

அன்றைய நாளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படமாட்டாது. மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மது விற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.