Close

The Hon’ble CM -VC – (Palani Kovil )

Publish Date : 05/04/2025
.

செ.வெ.எண்:- 12/2025

நாள்:04.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய பக்தி நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் கூடுதலாக 100 திருக்கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்¬, இ.ஆ.ப., அவர்கள் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆன்மிக புத்தக முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று(04.04.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மறுபதிப்பு செய்யப்பட்ட அரிய பக்தி நூல்கள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில் கூடுதலாக 100 திருக்கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களை காணொலிக்காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன்¬, இ.ஆ.ப., அவர்கள் திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆன்மிகு புத்தக முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருவதோடு, சமயத்தின் நன்னெறிகளை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லவும், முறையாகப் பாதுகாக்கவும் பதிப்பகப் பிரிவின் மூலம் அரிய பக்தி நூல்கள் மறுபதிப்பு செய்து வெளியிட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்து சமய அறநிலையத்துறையின் பதிப்பகப்பிரிவு தொடங்கப்பட்டு, பரவசமூட்டும் பக்தி இலக்கியங்கள், தலபுராணங்கள், அருட்பணி செய்த அருளாளர்களின் வரலாறுகள், கோயில் கலைநூல்கள், சிலைநூல்கள், காவியநூல்கள், ஓவியநூல்கள், தொன்மை வாய்ந்த பழந்தமிழ் ஓலைச்சுவடிகள், இறையடியார்களின் பொன்மொழிகள், மெய்யைப் போதித்து, மெய்யைக் காக்கும் சித்தர் நூல்கள் என அரிய பக்தி நூல்கள் புதுப்பொலிவுடன் மறுபதிப்பு செய்யப்பட்டு இதுவரை இரண்டு கட்டங்களாக 216 பக்திநூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவ்வாறு வெளியிடப்பட்ட பக்திநூல்கள் அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 103 திருக்கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களும் ஆணையர் அலுவலகத்தில் ஒரு விற்பனை நிலையமும் தொடங்கப்பட்டு நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 27.02.2024 அன்று நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் குழுவின் இரண்டாவது கூட்டத்தில், ”இந்து சமய அறநிலையத்துறை பதிப்பக வெளியீடுகளை விற்பனை செய்வதற்கு 103 திருக்கோயில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கூடுதலாக 100 திருக்கோயில்களில் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனை செயல்படுத்திடும் வகையில் 100 திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள புத்தக விற்பனை நிலையங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். திருக்கோயில் புத்தக விற்பனை நிலையங்கள் துறையின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்திருப்பதோடு, அவை அறிவுசார் மையங்களாகவும் திகழ்ந்து வருவது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிகழ்ச்சியில், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுாவமி திருக்கோயில், இணை ஆணையர் திரு.செ.மாரிமுத்து, திண்டுக்கல் இணை ஆணையர் திரு.கார்த்திக், பழனி நகர்மன்ற தலைவர் திருமதி உமா மகேஷ்வரி, துணை நகர்மன்ற தலைவர் திரு.கந்தசாமி, பழனி அறங்காவலர் குழுத் தலைவர் திரு.சுப்பிரமணியன், திரு.திருமலைச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.