Close

The Hon’ble Food and Civil Supply minister – BUS – Inaguration

Publish Date : 10/07/2025
.

செ.வெ.எண்:-34/2025

நாள்:-09.07.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், புதிதாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே கீரனூரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிதாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கத்தை இன்று(09.07.2025) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அதன்படி, பழனி – கீரனுார் மற்றும் பழனி – கொக்கரக்கோவலசு ஆகிய இரண்டு வழித்தடங்களில் புதிதாக இரண்டு அரசு பேருந்துகள் இயக்கத்தை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புதிய பேருந்தில் பொதுமக்களுடன் பயணம் மேற்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.