Close

The Hon’ble Food and Civil Supply Minister – Inspection (Ration Shop)

Publish Date : 25/09/2025
.

செ.வெ.எண்:-92/2025

நாள்: 24.09.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அரசபிள்ளைப்பட்டி நியாயவிலைக்கடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், அரசபிள்ளைப்பட்டி நியாயவிலைக்கடையை இன்று(24.09.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுபேற்ற பின்பு நெல் மழையின் காரணமாக நனையக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டில் 130 இடங்களில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிட்டங்கிகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி 26 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், சக்கரை போன்ற குடிமை பொருட்கள் தரமான வழங்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 52 மாதங்களில் 3,000 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்தில் மொத்தம் 65,279 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது, 100 முழு நேர நியாயவிலைக்கடைகளும், 87 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும் என மொத்தம் 187 நியாயவிலைக்கடைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், விருப்பாட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அரசப்பிள்ளைப்பட்டி நியாயவிலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப்பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் ஆய்வு செய்து, நியாயவிலைக்கடையின் முன்பகுதியில் நிழற்கூடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திதர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர், திரு.இரா.கண்ணன், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.சஞ்சைகாந்தி, வட்ட வழங்கல் அலுவலர் திருமதி சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பிரபு பாண்டியன், திரு.காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.