The Hon’ble Food and Civil Supply Minister -KKI -RRH-Vdr-Guji-Vdr
செ.வெ.எண்:-52/2025
நாள்:-15.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 664 பயனாளிகளுக்கு ரூ.23.13 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில்
292 பயனாளிகளுக்கு ரூ.2.79 கோடி மதிப்பீட்டிலும் வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி செ.ஜோதிமணி, மற்றும் வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன் ஆகியோர் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துார், குஜிலியம்பாறை மற்றும் வடமதுரை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம்(2025-2026) மற்றும் ஊரக வீடுகள் பராமரிப்புத் திட்ட பயனாளிகளுக்கு வேலை ஆணைகளை, வேடசந்துார் ஆர்வி திருமண மண்டபம், கூம்பூர் கே.கே.மஹால் மற்றும் வடமதுரை குமரன் மஹால் ஆகிய இடங்களில் இன்று(15.05.2025) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வழங்கினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார் ஆர்வி திருமண மண்டபம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேடசந்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 147 பயனாளிகளுக்கு ரூ.4.99 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 100 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டிலும், முதலமைச்சரின் மறுகட்டுமானத் திட்டத்தில் 37 பயனாளிகளுக்கு ரூ.88.80 இலட்சம் மதிப்பீட்டிலும் என 284 பயனாளிகளுக்கு ரூ.7.05 கோடி மதிப்பீட்டிலான வேலை ஆணைகளை வழங்கினார். மேலும், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் 20 நபர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் கடனுதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், கூம்பூர் கே.கே.மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 272 பயனாளிகளுக்கு ரூ.9.57 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தில் 192 பயனாளிகளுக்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டிலும் என 464 பயனாளிகளுக்கு ரூ.11.19 கோடி மதிப்பீட்டிலான வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் 20 நபர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் கடனுதவிகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வடமதுரை குமரன் மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், 245 பயனாளிகளுக்கு ரூ.8.57 கோடி மதிப்பீட்டிலான வேலை அனுமதி ஆணைகளை வழங்கினார். மேலும், திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பயனாளிகள் 6 நபர்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் கடனுதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
பெண்களின் நலனுக்காக நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம், மாணவிகளின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம், மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்யும் வகையில் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
கரூர், கிருஷ்ணராயபுரம், அரவகுறிச்சி. வேடசந்தூர், ஆத்தூர், ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், நத்தம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு காவிரி ஆற்றிலிருந்து குளங்கள் மற்றும் ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கான ஆய்வு பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. இத்திட்டத்திற்கு ஏதுவாக விட்டுப்போன குளங்கள் இருந்தால் அதனை சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், இத்திட்டத்தின் மூலம் 8 சட்டமன்ற தொகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்.
குஜிலியம்பாறை, நத்தம், சாணார்பட்டி ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குஜிலியம்பாறையில் நீதிமன்றம், தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு தலா ரூ.4000 வீதம் வழங்கப்பட்டது. மேலும், 14 வகையான மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.18 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.v
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் 1972-ஆம் ஆண்டு இந்தியாவில் ஆதிதிராவிடர் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லத்திற்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இதுவரை இந்தியாவில் இதுபோன்ற திட்டம் செயல்படவில்லை. தமிழகத்தில் தான் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் ரூ.1.00 இலட்சம் கடனாக வழங்கப்படுகிறது. மேலும், வீடு கட்டுவதற்கான செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்களை குறைந்த விலையில் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவைருக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஊரக வீடுக

.

.

.

.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் சுமார் 20.70 இலட்சம் குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டம் இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாட்டில்தான் செயல்படுத்தப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்பிற்காகவும், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில்(தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் உயர்கல்வி படிப்பது 34 சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் வாயிலாக சுமார் 5 இலட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை பெற்று பயனடைந்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆகமொத்தம் தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது.
படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு மையம் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவியள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கெள்ள வேண்டும்.
பொதுமக்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கியிருந்தால் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு 48 மணி நேரத்தில் ஏற்படும் சிகிச்சை செலவினை அரசு ஏற்றுக்கொள்ளும். இதற்காக 485 அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள், 119 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 20.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த 48 மாதங்களில் 2,600 நியாயவிலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதியதாக முழுநேரம் மற்றும் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 260 கடைகள் பிரிக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மட்டும் 86 புதிய கடைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக பொற்கால ஆட்சி நடத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.