Close

The Hon’ble Food and Civil Supply Minister – Makkaludan Muthalvar – Meeting

Publish Date : 15/07/2024
.

செ.வெ.எண்:-28/2024

நாள்:-11.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், தொப்பம்பட்டியில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டியில் இன்று(11.07.2024) “மக்களுடன் முதல்வர்“ திட்ட சிறப்பு முகாமை துவக்கி வைத்து, 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின், அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் எல்லாம், தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டியிருக்கிறார். அந்த வகையில் “மக்களுடன் முதல்வர்“ சிறப்பு முகாம் ஏற்கனவே பேரூராட்சி, நகராட்சி ஆகிய பகுதியில் நடைபெற்றது. முகாமில் பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று(11.07.2024) தருமபுரியில் தொடங்கி வைத்துள்ளார்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தருமபரியில் தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களில் 388 ஒன்றியங்களில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஒவ்வொரு பகுதிகளிலும் 5 ஊராட்சிகளை இணைத்து அல்லது 20 ஆயிரம் மக்கள் தொகை கிராம ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்று, அந்த மனுவின்மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்டம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறார். அந்த வகையில் இன்றைய தினம் திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி வட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி, புளியம்பட்டி, கொங்கமுத்தூர், தொப்பம்பட்டி, வேலம்பட்டி, தும்மலப்பட்டி ஆகிய 6 ஊராடசிகளுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களிடம் மனுக்களை பெற்று, அதற்கு தீர்வு காணும் வகையில் ”மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் நடைபெறுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளை நிறைவேற்று ஒரு பொற்கால ஆட்சியினை நடத்தி வருகிறரர். எனவே மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற பின்பு குறிப்பாக பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 1 கோடி 14 இலட்சம் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1 இலட்சத்து 48 ஆயிரம் நபர்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. தகுதியுள்ள நபர்கள் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பெண்கள் நகர பேருந்துகளில் சென்றால் கட்டணமில்லா சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 7 ஆயிரம் புதிய பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கின்ற சுமார் 18 இலட்சம் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. வருகின்ற 15-ந் தேதி அன்று அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் நிகழ்வை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைக்க உள்ளார்கள்.

புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டினை குடிசை இல்லா மாநிலமாக உருவாக்க கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்டிதர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, காவேரியிலிருந்து குடிநீர் கொண்டு வரும் பணிகள், துரிதமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நியாயவிலைக்கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், ”மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்கள் 306 கிராமப்புற பஞ்சாயத்து பகுதிகளில் 11.07.2024 முதல் 23.08.2024 வரை 23 நாட்கள் 68 முகாம்கள் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. அன்றாடம் பொதுமக்கள் அணுகும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, மின்சாரத்துறை, வீட்டு வசதி வாரியத்துறை, மருத்துவத்துறை, மாவட்ட தொழில் மையம், பால்வளத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் / பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, தாட்கோ, வேலைவாய்ப்புத்துறை, வேளாண்மைத்துறை, மீன்வளத்துறை, கால்நடைபராமரிப்புத்துறை, தொழிலாளர் நலத்துறை, பொது மேலாளர்(முன்னோடி வங்கி), மற்றும் மகளிர் திட்டம் ஆகிய 22 துறைகள் தொடர்புடைய கோரிக்கை மனுக்கள் இச்சிறப்பு முகாம்களில் பெறப்பட உள்ளது. பெறப்படும் அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 தினங்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு வழங்கப்படும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு என்ற வகையில் செயல்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படாத திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு அனைவரும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள மொத்தம் 2992 ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படவுள்ளது. அதில் முதல் கட்டமாக 50 ஆசிரியர்களுக்கு தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கையடக்க கணினியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.2.88 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மூன்று சக்கர வாகனம் என மொத்தம் 53 பயனாளிகளுக்கு ரூ.12.88 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி, அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், துணைத் தலைவர் திரு.பி.சி.தங்கம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் திருமதி கவிதா, வட்டாட்சியர்கள் திரு.சசி, திரு.சக்திவேலன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.வேதா, திருமதி தாசிரா, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.