Close

The Hon’ble Food and Civil Supply Minister – Mobile fish outlets launched

Publish Date : 13/08/2024
.

செ.வெ.எண்:-30/2024

நாள்:12.08.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள், ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் 4 நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு தரமான மற்றும் புரதச்சத்து நிறைந்த மீன்கள் நியாயமான விலையில் கிடைத்திட வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் 4 நடமாடும் மீன் விற்பனை நிலையங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒட்டன்சத்திரத்தில் இன்று(12.08.2024) தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவ, மாணவிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை மற்றும் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டுத் திட்டம் மூலமாக 4 நடமாடும் மீன்விற்பனை நிலையங்கள் மொத்தம் ரூ.80.00 இலட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(12.08.2024) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மீன் விற்பனை வாகனங்களை கொண்டு மீனவ மற்றும் மீன் பண்ணை விவசாயிகள் மற்றும் முகமை உறுப்பினர்களுக்கு மீன் குஞ்சுகள் விநியாகம் செய்திட ஏதுவாக அரசு மீன்குஞ்சு உற்பத்தி நிலையங்களிலிருந்து மீன்குஞ்சுகள் பெறவும், பொதுமக்களுக்கு மீன் சார்ந்த உணவுகளை விற்பனை செய்திடவும், மீன் சார்ந்த உணவுகள் தயாரித்திட தேவைப்படும் மீன்களை திண்டுக்கல் மாவட்டத்தின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள 12 குளங்கள், பழனி வட்டத்தில் உள்ள 22 குறுகிய கால பாசனக்குளங்கள், 6 நீர்த்தேக்கங்கள், 24 திண்டுக்கல் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமை குளங்கள் ஆகியவற்றிலிருந்து கொள்முதல் செய்திடவும் பயன்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு தரமான மற்றும் புரதச் சத்து நிறைந்த மீன்களை உடனுக்குடன் அரசு நிர்ணயம் செய்த குறைவான மற்றும் நியாயமான விலையில், சுகாதாரமான முறையில் மக்களுக்கு வீடுகளுக்கே சென்று சேர்த்திட வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதிபெ.திலகவதி, பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் திரு.கே.ஜனார்த்தனர், மீன்வளத்துறை ஆய்வாளர்கள் திருமதி ஏ.இந்துசாரா, திருமதி கே.ஞானசுந்தரி, திருமதி சி.பார்வதி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.