The Hon’ble Food and Civil Supply Minister – Oddanchatram Union – Schemes
செ.வெ.எண்:-68/2024
நாள்:-26.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், சின்னக்காம்பட்டி, எல்லைப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், சின்னக்காம்பட்டி, எல்லைப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(26.12.2024) திறந்து வைத்து, ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பான ஆட்சி நடத்தி வருகிறார்.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, சின்னக்காம்பட்டி ஊராட்சியில் கோமாளிப்பட்டி மற்றும் நாரணப்பநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களில் தலா ரூ.4.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, நமக்குநாமே திட்டத்தில், சின்னக்காம்பட்டி ஊராட்சியில், கோமாளிப்பட்டி, இராகவநாக்கன்பட்டி கிராமங்களிலும், எல்லப்பட்டி ஊராட்சியில் எல்லப்பட்டி ஆகிய கிராமங்களிலும் தலா ரூ.50.00 இலட்சம் மதிப்பீட்டிலும், நாரணப்பநாயக்கன்பட்டியில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்ட சமுதாயக் கூடங்கள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் ரூ.22.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நுாலக கட்டடம் மற்றும் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், மார்க்கம்பட்டி ஊராட்சியில் ரூ.16.55 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், எல்லப்பட்டி ஊராட்சியில் எல்லப்பட்டியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டிலும் மற்றும் அண்ணாநகரில் ரூ.9.32 இலட்சம் மதிப்பீட்டிலும், மார்க்கம்பட்டி ஊராட்சி மார்க்கம்பட்டியில் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்ட நியாய விலைக்கடை கட்டடங்கள் என மொத்தம் ரூ.2.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், சின்னக்காம்பட்டி ஊராட்சியில் இராகவநாயக்கன்பட்டி முதல் மலையடிவாரம் வரையிலான சாலை ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் வாயிலாக மொத்தம் ரூ.6.59 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் மற்றும் மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் வாயிலாக ரூ.2.80 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், இன்று காலையில் ரூ.7.15 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டு பணிகளும், மாலையில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப்பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ஆகமொத்தம் இன்றையதினம் மட்டும் ரூ.9.39 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.8.45 கோடி மதிப்பீட்டிலான சாலை மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி மு.அய்யம்மாள், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் திரு.கா.பொன்ராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் திரு.சி.குருமூர்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி பூங்கொடி, உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.ஐ.நாகராஜன், உதவிப்பொறியாளர் திரு.விஜயராகவன், வாடிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திரு.ஜோதீஸ்வரன், நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டம் உதவிப்பொறியாளர் திரு.பொன்னுவேல், இளநிலைப்பொறியாளர் திரு.கருப்பண்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.