Close

The Hon’ble Food and Civil Supply Minister – Road Inspection

Publish Date : 22/11/2024
.

செ.வெ.எண்:-46/2024

நாள்:-20.11.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை பிரிவுகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விபத்துக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பைபாஸ் சாலை பகுதிகளில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விபத்துக்களை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக இன்று(20.11.2024) ஆய்வு மேற்கொண்டார்.

ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் செல்லும் வகையில் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் விபத்துக்களை தடுக்க என்னென்ன பணிகள் செய்ய வேண்டும். ஒட்டன்சத்திரம் பைபாஸ் சாலை பிரிவில் காளாஞ்சிப்பட்டியில் அணுகு சாலை, கொல்லப்பட்டியில் பாலம், லக்கையன்கோட்டை முதல் அரசப்பப்பிள்ளைபட்டி வரை உயர் மின்கோபுர விளக்குகள், அரசப்பப்பிள்ளைபட்டியில் சாலைகள் சந்திப்பு பகுதியை மேம்படுத்தி ரவுண்டானா மற்றும் அணுகுசாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்றும், ஒட்டன்சத்திரம் – கோயம்புத்துார் பைபாஸ் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் பகுதியில் விபத்துக்கள் ஏற்படா வண்ணம் என்னென்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

ஆய்வின்போது, திட்ட இயக்குநர் திரு.சுரேஷ்சாந்தமு, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(நிலம் எடுப்பு) திரு.அப்துல் காசிம், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.சக்திவேல், கோட்டப்பொறியாளர்(தேசிய நெடுஞ்சாலை) திரு.மகேஸ்வரன், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் திரு.திருமலைச்சாமி, ஆணையாளர் திருமதி சுவேதா, வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.