Close

The Hon’ble Food and Civil Supply Minister-Thayumanavar – Scheme

Publish Date : 18/08/2025
.

செ.வெ.எண்:-55/2025

நாள்: 12.08.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை சென்னையில் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சிந்தலவாடம்பட்டி, புஷ்பத்துார் ஊராட்சி, வயலுார் விவி நகர், கூத்தம்பூண்டி ஊராட்சி. மோதும்பட்டி, மொ.கீரனுார் ஆகிய இடங்களில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்“ பயனாளிகளுக்கு வீடு தேடி குடிமைப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளையும் சென்னையில் இன்று (12.08.2025) தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், சிந்தலவாடம்பட்டி, புஷ்பத்துார் ஊராட்சி, வயலுார் விவி நகர், கூத்தம்பூண்டி ஊராட்சி. மோதும்பட்டி, மொ.கீரனுார் ஆகிய இடங்களில் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்“ பயனாளிகளுக்கு வீடு தேடி குடிமைப் பொருட்கள் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் அனைத்தும் ஜாதி, மதம், இனம், கட்சி பாகுபாடு இன்றி அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெறுப்பேற்ற பின்பு தேர்தல் சமயத்தில் சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல் சொல்லாத பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் “முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை” பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்து, தாயுமானவர் திட்ட வாகனங்களின் சேவைகளை சென்னையில் இன்று(12.08.2025) தொடங்கி வைத்துள்ளார்கள்.

இதன் தொடர்ச்சியாக இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 70 வயதிற்கு மேல் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் நியாயவிலைக்கடைகளுக்கு வர வேண்டியது இல்லை. நியாயவிலைக்கடைகளிலிருந்து அரிசி, பருப்பு, சக்கரை, பாமாயில், கோதுமை ஆகிய பொருட்கள் வீட்டிற்கே கொண்டு வந்து வழங்கப்படும்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 70 வயதிற்குமேல் உள்ள நபர்களுக்கும், மாற்றுத்திறனாளி நபர்களுக்கும், நியாயவிலைக்கடையில் மாதந்தோறும் வாங்கும் குடிமைப்பொருட்களை இனிமேல் மாதத்தின் இரண்டாவது வாரமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் இல்லத்திற்கு கொண்டு சென்று வழங்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் 34,809 நியாயவிலைக்கடைகளை சார்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்தகுடிமக்களை சேர்ந்த சுமார் 15,81,364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளிகளும், 91,967 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளிகளுக்கு அவர்கள் இல்லங்களுக்கே குடுமைப் பொருட்களை விநியோகம் செய்யப்படவுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 9,083 பயனாளிகள் இத்திட்டத்தில் பயன்பெறவுள்ளார்கள். புஷ்பத்தூர், முத்தநாயக்கன்பட்டி, மிடாப்பாடி ஆகிய ஊராட்சியில் தாயுமானர் திட்டத்தில் 760 குடும்ப அட்டைகளில் 320 நபர்கள் பயன்பெறுகிறார்கள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒட்டன்சத்திரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நலம் காக்கும் மு.க.ஸ்டாலின் அரசு என்ற திட்டத்தின் மூலம் சிறந்த மருத்துவர்கள் இம்முாம்களில் கலந்து கொண்டு இரத்த பரிசோதனை, இசிஜி, எக்கோ ஆகிய பரிசோதனைகளை பொதுமக்களுக்கு மேற்கொண்டு மேல் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்றால் அதற்கும் தீர்வு காணும் வகையில் பரிந்துரை செய்யப்படும்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் 104 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. புஷ்பத்தூர், மிடாப்பாடி ஆகிய ஊராட்சிகளில் 9 நியாயவிலைக்கடைகள் பிரிக்கப்பட்டுள்ளது. புஷ்பத்தூர் ஊராட்சியில் 206 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கி, வீடுகட்டியும் தரப்படும். ஒட்டன்சத்திரம், கீரனூர் ஆகிய பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.இரா.கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.