The Hon’ble Food and Civil Supply Minister -Thoppampatty Union-schemes – AN Programmes
செ.வெ.எண்:-37/2024
நாள்:-16.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், மேட்டுப்பட்டி ஊராட்சியில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புங்கமுத்துார், பருத்தியூர் மற்றும் பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.82.62 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சியில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு இன்று(16.11.2024) அடிக்கல் நாட்டி, புங்கமுத்துார், பருத்தியூர் மற்றும் பாலப்பன்பட்டி ஆகிய ஊராட்சிகளில் ரூ.82.62 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், ஏழை, எளிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் வகையில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம், அரசு நகரப் பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள விடியல் பயணத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், மாணவர்கள் உயர்கல்வி படித்தால் அவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம், முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இன்று(16.11.2024) மாலை தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பட்டி ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் மேட்டுப்பட்டியில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேலும், புங்கமுத்துார் ஊராட்சியில் நமக்குநாமே திட்டத்தில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம், அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், பருத்தியூர் ஊராட்சி, வடபருத்தியூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியிலிருந்து ரூ.10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை மற்றும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் ரூ.14.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டடம், பாலப்பன்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் ரூ.14.31 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக்கட்டடம் என ஆக மொத்தம் ரூ.82.62 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இன்றையதினம் காலையில் தேவத்துார், போடுவார்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி மற்றும் கொத்தயம் ஆகிய ஊராட்சிகளில் ரூ.1.21 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள், என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் தெரிவித்தார்.
விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி பெ.திலகவதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா இராஜேந்திரன், துணைத்தலைவர் திரு.பி.சி.தங்கம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.தாஹீரா, பாலப்பன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி சாரதா சண்முகவேல், துணைத்தலைவர் திரு.நல்லபண்டிதவேல், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி சா.காலின் செல்வராணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.