Close

The Hon’ble Food and Civil Supply Minister – Vedasandur Function

Publish Date : 26/01/2025
.

செ.வெ.எண்:-52/2025

நாள்:-24.01.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார் வட்டம், தொட்டணம்பட்டியில் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான சாலை விரிவாக்கப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், வேடசந்துார் வட்டம், தொட்டணம்பட்டியில் ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான சாலை விரிவாக்கப் பணிகளை இன்று(24.01.2025) அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் – கரூர் மாநில நெடுஞ்சாலையில் தொட்டணம்பட்டி முதல் கோகோ ஆலை வரையிலும், திருக்கண் முதல் சுந்தரபுரி வரையிலும், குளத்துார் முதல் இலட்சுமணபுரம் வரையிலும் நான்குவழி மாநில நெடுஞ்சாலையாக ரூ.16.90 கோடி மதிப்பீட்டிலான சாலை விரிவாக்கப் பணிகளுக்கு மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திரு.கே.பி.சங்கர், உதவி கோட்டப் பொறியாளர் திரு.முனீஸ்வரராஜ், வேடசந்துார் வட்டாட்சியர் திரு.சுல்தான் சிக்கந்தர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.