Close

The Hon’ble Road and Food and Civil Supply Ministers Inspection

Publish Date : 12/10/2024
.

செ.வெ.எண்:-21/2024

நாள்:-09.10.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ரூ.5.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வெளிநோயாளிகள் பிரிவு கட்டட பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர.சக்கரபாணி அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் ரூ.5.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வெளிநோயாளிகள் பிரிவு கட்டட பணிகளை இன்று(09.10.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அரசு கூடுதல் தலைமைச் செயலர் திரு.மங்கத்ராம் சர்மா, இ.ஆ.ப., அவர்கள், அரசு செயலர்(நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) மரு.ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார், மதுரை(வடக்கு) சட்டமன்ற உறுப்பினர் திரு.கோ.தளபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆய்வின்போது, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எ.வ.வேலு அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவு கட்டடம் ரூ.5.39 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடத்தில் வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறை, அறுவை சிகிச்சை அரங்கம், ஆய்வகம், மருத்துவர் ஆலோசனை அறைகள், சிடி ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே அறைகள், பொருட்கள் இருப்பு அறை, பொதுக்கழிவறைகள் உட்பட வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன.

பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, முதன்மை தலைமைப் பொறியாளர்(மதுரை மண்டலம்) திரு.செல்வராஜன், கண்காணிப்புப் பொறியாளர் (மதுரை மண்டலம்) திரு.அய்யாக்கண்ணு, செயற்பொறியாளர் திரு.தங்கவேல், கொடைக்கானல் நகராட்சி தலைவர் திரு.பா.செல்லத்துரை, கொடைக்கானல் நகர்மன்ற துணைத்தலைவர் திரு.கே.பி.என்.மாயக்கண்ணன், கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவராம், இணை இயக்குநர்(சுகாதார நலப்பணிகள்) மரு.இரா.பூமிநாதன், கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் திரு.ப.சத்தியநாதன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துப் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.