The Hon’ble Rural Development, Food and Civil Supply, Health Ministers – DGL
செ.வெ.எண்:-109/2025
நாள்:-28.06.2025
திண்டுக்கல் மாவட்டம்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் திண்டுக்கல் மாவட்டத்தில் ரூ.12.96 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் திண்டுக்கல்(பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் ரூ.2.25 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட 4 மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று(28.06.2025) திறந்து வைத்து, ரூ.7.90 கோடி மதிப்பீட்டில் 11 புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர். ஆகமொத்தம், மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகள் என ரூ.12.96 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை தொடங்கி வைத்தனர்.
திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இ.பெ.செந்தில்குமார், திரு.ச.காந்திராஜன், திண்டுக்கல் மாநகராட்சி வணக்கத்திற்குரிய மேயர் திருமதி இளமதி ஜோதிபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் மற்றும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிடி ஸ்கேன் கருவி மற்றும் ரூ.61.29 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளூரோஸ்கோப்பி கருவிகள் என ரூ.2.81 கோடி மதிப்பீட்டிலான புதிய உயர் மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாடிற்காக இன்று திறந்து வைத்தனர்.
தொடர்ந்து, திண்டுக்கல்(பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திண்டுக்கல்லில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையம், திண்டுக்கல் பாஸ்கா மைதானம் பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், கன்னிவாடி பேரூராட்சியில் கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயடிளிகள் பிரிவு, குட்டுப்பட்டியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் என ரூ.2.25 கோடி மதிப்பீட்டிலான புதிய மருத்துவக் கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தனர்.
மேலும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் போடிகாமன்வாடியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், சின்னாளப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எம்.வாடிப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், முசுவனுாத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் கொசுவப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோசுக்குறிச்சி, எம்.புதுப்பட்டி, லிங்கவாடி மற்றும் சாத்தாம்பாடி ஆகிய 4 கிராமங்களில் தலா ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ.7.90 கோடி மதிப்பீட்டிலான புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளை இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
ஆகமொத்தம், மாவட்டத்தில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகள் என ரூ.12.96 கோடி மதிப்பீட்டிலான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் தொடங்கி வைக்கப்பட்டன.
இவ்விழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ வசதிகள் மற்றும் சுகாதாரப் பணிகளுக்காக எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். அனைவரும்கும், கட்சி, இனம், மதம் பாகுபாடு இன்றி வீடு தேடி மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.2.25 கோடி மதிப்பீட்டிலான புதிய மருத்துவக் கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, ரூ.7.90 கோடி மதிப்பீட்டிலான புதிய மருத்துவ கட்டடங்கள் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்களிர் உயிர்களை காப்பாற்றிட எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் மருத்துவ சேவையில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது.
அரசின் திட்டங்களை வீடு தேடிச் சென்றடையச் செய்வதிலும், மாநிலத்தின் உரிமைகளை பெற்றுத் தருவதிலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சிறப்பாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ஒன்றிய அரசின் நிதி கிடைக்காவிட்டாலும், மாநில அரசின் நிதியிலிருந்து மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார், என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பேசியதாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மருத்துவத்துறையும், கல்வித்துறையும் தனது 2 கண்கள் என்று கூறி இந்த இரண்டு துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிகா தரம் உயர்த்தப்பட்டு ரூ.90 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் சுமார் 2.50 கோடி பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48 திட்டத்தில் முதல் 48 மணி நேரத்திற்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக ரூ.2.00 இலட்சம் மதிப்பீட்டிலான செலவை அரசு ஏற்றுள்ளது. அந்த வகையில் பல இலட்சம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. கூட்டுறவு மருந்தகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் முடிவுற்ற மருத்துவத் திட்டப்பணிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்படுகின்றன. மேலும், புதிய மருத்துவத் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகின்றன.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய சிடி ஸ்கேன் கருவி மற்றும் 61.29 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளூரோஸ்கோப்பி கருவிகள் என ரூ.2.81 கோடி மதிப்பீட்டிலான புதிய உயர் மருத்துவ உபகரணங்களை பொதுமக்கள் பயன்பாடிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, திண்டுக்கல்லில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற துணை சுகாதார நிலையம், திண்டுக்கல் பாஸ்கா மைதானம் பகுதியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், கன்னிவாடி பேரூராட்சியில் கன்னிவாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புறநோயhளிகள் பிரிவு, குட்டுப்பட்டியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம் என ரூ.2.25 கோடி மதிப்பீட்டிலான புதிய மருத்துவக் கட்டடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
மேலும், ஆத்துார் சட்டமன்ற தொகுதியில் போடிகாமன்வாடியில் ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், சின்னாளப்பட்டி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் எம்.வாடிப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் மற்றும் வட்டார பொது சுகாதார அலகு கட்டடம், முசுவனுாத்தில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையம், நத்தம் சட்டமன்ற தொகுதியில் கொசுவப்பட்டியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கோசுக்குறிச்சி, எம்.புதுப்பட்டி, லிங்கவாடி மற்றும் சாத்தாம்பாடி ஆகிய 4 கிராமங்களில் தலா ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலையங்கள் என மொத்தம் ரூ.7.90 கோடி மதிப்பீட்டிலான புதிய மருத்துவக் கட்டடங்கள் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன.
இதுதவிர பழனி, வேடசந்துார், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளிலும் முடிவுற்ற புதிய மருத்துவக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டு, புதிய மருத்துவக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளன. ஆகமொத்தம் திண்டுக்கல் மாவட்டத்தில் 45 இடங்களில் ரூ.21.64 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகள் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 2021-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 3,600-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும், 1,550 உள்நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் புதியதாக தொடங்கப்பட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எல்லா துறைகளிலும் முதல் இரண்டு இடங்களில் வகித்து பொதுமக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கி வருகிறது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் ரூ.101 கோடி மதிப்புள்ள 1,748 மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. தினந்தோறும் சராசரியாக 50 பெரிய அறுவை சிகிச்சைகளும் 125 சிறிய அறுவை சிகிச்சைகளும், 50 அவசர அறுவை சிகிச்சைகளும், சுமார் 35 பிரசவங்களும் நடைபெற்று வருகிறது.
இன்று திறக்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் இயந்திரம் ரூ.2.20 கோடி மதிப்புள்ளதாகும். இங்கு ஏற்கனவே ஒரு சிடி ஸ்கேன் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக கூடுதலாக ஒரு சிடி ஸ்கேன் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாதத்திற்கு சுமார் 3,500 நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், இன்றையதினம் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ள மற்றொரு டிஜிட்டல் நுண்கதிர் இயந்திரம் ரூ.61,29,200/- மதிப்புள்ளதாகும். இதுதவிர இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எக்ஸ்ரே, டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளூரோஸ்கோப்பி இயந்திரங்கள் செயல்பட்டு வருகிறது. மாதந்தோறும் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரம் மூலம் 10,000 நபர்களும், எக்ஸ்ரே இயந்திரம் மூலம் 8,000 நபர்களும் பயனடைந்து வருகின்றனர். மேலும், ஒரு மாமோகிராம் (Mammogram) இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் மாதத்திற்கு சுமார் 400 நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர்.
இங்கு 21 கெமிக்கல் சிறப்பு மருத்துவர்கள், 220 மருத்துவர்கள், 420 செவிலியர்கள், 45 மருத்துவம் சாரா பணியாளர்கள், 510 வெளிப்புற ஆதார பணியாளர்கள் என சுமார் 1218 பணியாளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 600 மருத்துவ மாணவர்கள் பயின்று வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 28 மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின்கீழ் 12 மாணவர்களும் பயன்பெற்று வருகின்றனர். முதல்பட்டதாரி உதவித்தொகை 60 மாணவர்களுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உதவித்தொகை 74 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 500 இடங்களில் பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் (திண்டுக்கல் மாநகராட்சி-8, பழனி நகராட்சி-1, கொடைக்கானல் நகராட்சி-1) ரூ.2.50 கோடி செலவில் கட்டட பணிகள் நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.06.2023 அன்று திண்டுக்கல் மாநகராட்சி–8 (கமலாநேரு, கமலாநேரு2, மரியநாதபுரம், மரியநாதபுரம்2, பழனிரோடு, பழனிரோடு2, சாவேரியார்பாளையம், சவேரியார்பாளையம்2), பழனி நகராட்சி–1 (பழனி), ஆகிய 9 இடங்களில் திறந்து வைத்தார்கள். கொடைக்கானல் நகராட்சியில் (அப்சர்வேட்டரி) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 03.07.2025 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 03.07.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அதில் திண்டுக்கல் மவாட்டத்தில் மட்டும் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆடலூர் பன்றிமலை ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மார்க்கம்பட்டி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அடங்கும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பின்னர், 19 மாவட்டங்களில் 25 மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்ள ரூ.1018 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்றன. இதில் திருத்தணி மருத்துவமனை மற்றும் பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுமார் 2280 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிய கட்டடங்கள் மற்றும் மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளில் இதுவரை ரூ.345.92 கோடி செலவில் பல்வேறு மருத்துவக் கட்டடங்கள் மற்றும் உயர் மருத்துவ கருவிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில், ரூ.2.25 கோடி செலவில் 9 நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டடங்கள், ரூ.4.10 கோடிசெலவில் 15 துணை சுகாதார நிலைய கட்டடங்கள், ரூ.7.46 கோடி செலவில் 16 ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவு, ஆய்வக கட்டடம், மருத்துவர் மற்றும் செவிலியர் குடியிருப்பு, சித்தாபிரிவு கட்டடங்கள், ரூ.80 இலட்சம் செலவில் பழனி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், கண் அறுவை அரங்கம், ரூ.31 இலட்சம் செலவில் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவுக் கட்டடம், ரூ.331 கோடி செலவில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம், மருத்துவ மாணவர்களுக்கான இயன்முறை கூடம், கலைக்கூடம், நிர்வாக வளாகம், சிற்றுண்டி நிலையம், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்புகள், நவீன சமையல் கூடம், பிரேத பரிசோதனைக் கூடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், தாழ்வழுத்த மின்அழுத்த மின்மாற்றியறை மற்றும் மருத்துவ சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் துணை சுகாதார நிலையம் – 346, ஆரம்ப சுகாதார நிலையம் – 73, வட்டம் சாரா மருத்துவமனை – 6, வட்டார மருத்துவமனை –4, மாவட்ட தலைமை மருத்துவமனை (பழனி) – 1, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை – 1 ஆகியவை உள்ளன.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவிப்பின்படி, தமிழ்நாடு முழுவதும் 708 நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 500 இடங்களில் பணிகள் முடிவடைந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் (திண்டுக்கல் மாநகராட்சி-8, பழனி நகராட்சி-1, கொடைக்கானல் நகராட்சி-1) ரூ.2.50 கோடி செலவில் கட்டட பணிகள் நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 06.06.2023 அன்று திண்டுக்கல் மாநகராட்சி–8 (கமலாநேரு, கமலாநேரு2, மரியநாதபுரம், மரியநாதபுரம்2, பழனிரோடு, பழனிரோடு2, சாவேரியார்பாளையம், சவேரியார்பாளையம்2), பழனி நகராட்சி–1 (பழனி), ஆகிய 9 இடங்களில் திறந்து வைத்தார்கள்.
கொடைக்கானல் நகராட்சியில் (அப்சர்வேட்டரி) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 03.07.2025 அன்று திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 03.07.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அதில் திண்டுக்கல் மவாட்டத்தில் மட்டும் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் ஆடலூர் பன்றிமலை ஆரம்ப சுகாதார நிலையம், ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மார்க்கம்பட்டி, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அடங்கும்.
திண்டுக்கல்மாவட்டத்தில் பல்வேறு மருத்துவக் கட்டடங்கள், உயர் மருத்துவ கருவிகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்திட மானியக்கோரிக்கை அறிவிப்பில்(2025-26) ரூ.44.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது (NQAS – National Quality Assurance Standards Certificate) தமிழ்நாடு இதுவரை – 824 மருத்துவனைமகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் விருதுகள் பெற்றுள்ளன. அதில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு – 755 விருதுகள் பெற்றுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்டம் 14 விருதுகள் பெற்றுள்ளன.
மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ் (LaQshya – Labour Room Quality Improvement Initiative) தமிழ்நாட்டில் இதுவரை – 111 மருத்துவமனைகள் பெற்றுள்ளன. அதில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு – 82 மருத்துவமனைகள் விருது பெற்றுள்ளன. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழனி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, கொடைக்கானல் அரசு மருத்துவமனை ஆகியவை விருதுகள் பெற்றுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் தொகை–17,70,446 ஆகும். இதில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 17,23,399 தொடர் சேவைகள் மற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் அரசு மருத்துவமனை – 8, தனியார் மருத்துவமனை – 18 என மொத்தம் 26 மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 12,156 பயனாளிகளுக்கு ரூ. 6,98,43,905 மதிப்பீட்டிலான சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் 2021-2022 –ஆம் ஆண்டு 46 முகாம்கள் மூலம் 50,493 நபர்களும், 2022-2023–ஆம் ஆண்டு 46 முகாம்கள் மூலம் 49,037 நபர்களும், 2023-24-ஆம் ஆண்டு 46 முகாம்கள் மூலம் 48,511 நபர்களும், 2024-25-ஆம் ஆண்டு 60 முகாம்கள் மூலம் 67,340 நபர்களும் பயனடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்கும் பொருட்டு 27.06.2023 அன்று இதயம் காப்போம் திட்டம் ரூ.3.37 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. சிறுநீரகம் பாதுகாப்புதிட்டம் ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் பொருட்டு 10.07.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.
தொற்றா நோய்களுக்கான பணியிடம் சார்ந்த பரிசோதனை(Workplace Based NCD Screening Program) மக்களைத்தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மக்களின் பயன்பாட்டை பொறுத்து மருத்துவ உபகரணங்கள் அமைக்கவும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கவும் தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் திரு.ச.ராசப்பா, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் மரு.இரா.சுகந்தி இராஜகுமாரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.