Close

The Hon’ble Rural Development Minister – Makkaludan Muthalvar

Publish Date : 15/07/2024
.

செ.வெ.எண்:-27/2024

நாள்:-11.07.2024

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை துவக்கி வைத்து 37 பயனாளிகளுக்கு ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி, அவர்கள் ”மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையிலும், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் அவர்கள் முன்னிலையில் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் என்.பஞ்சம்பட்டியில் இன்று(11.07.2024) தொடங்கி வைத்து 37 பயனாளிகளுக்கு ரூ.26.00 இலட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொருளாதார ஏற்றதாழ்வு இன்றி எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகின்றார்கள். பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று அதன் நிறைவேற்றும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தினை ஏற்படுத்தி நகர்புறங்களில் செயல்படுத்தினார்கள். அதனை தொடர்ந்து ஊரக பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இரண்டாம் கட்டமாக இன்று (11.07.2024) துவக்கி வைக்கபட்டுள்ளது. இதன் மூலம் பல இலட்சம் மக்கள் பயன்பெற உள்ளார்கள் என்பதனை நினைத்து மனம் மகிழ்ச்சி அடைகிறது. இத்திட்டங்களின் வாயிலாக விரைந்து தீர்வு காணப்படுகிறது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை எளிய பொதுமக்களின் துயர் துடைத்திட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞரின் மகளிர் உரிமைத்திட்டத்தினை ஏற்படுத்தியதனால் தற்போது 1.16 கோடி பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றார்கள். தகுதியுள்ளவர்கள் விடுபட்டியிருந்தால் அவர்களின் மனுக்களும் பரிசீலித்து உரிமைத் தொகை பெற்றுத்தரப்படும். மாணவிகளின் கல்வி பொருளாதார காரணங்களால் தடைபடக்கூடாது என்பதற்காக புதுமைப் பெண் திட்டத்தினை ஏற்படுத்தி மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறார்கள். இத்திட்டத்தினை விரிவுபடுத்தி மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழ் புதல்வன் திட்டத்தினை ஏற்படுத்தி மாணவர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படவுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆத்தூர், நிலக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்திட ரூ.550 கோடி ஒதுக்கீடு செய்து வைகை அணையிலிருந்து தண்ணீர் கொண்டுவர புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார்கள். பொதுமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் தமிழ்நாடு அரசு எவ்வித சமரசமின்றி உறுதியாக உள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் நடைபெறும் 2500 முகாம்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களே நேரடியாக சென்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெறும் மாதியான திட்டம் ஏற்படுத்தப்பட்டு அவரின் நேரடி கண்காணிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பொதுமக்களின் கோரிக்கைகளை காது கொடுத்து கேட்டு, தீர்வு வழங்கும் முதல்வராக, இந்தியாவிற்கே முன்மாதிரி முதல்வராக திகழ்கிறார். பொதுமக்களின் தேவையினை கருத்தில் கொண்டு, திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களுக்கு பொதுமக்கள் நல்ஆதரவு தர வேண்டும். அலுவலர்கள் முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயன்களை விரைந்து வழங்கிட வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின் போது, 7 பயனாளிகளுக்கு ரூ.2.69 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும், 5 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் ரூ.1.10 இலட்சம் மதிப்பீட்டில் இயற்கை மரண நிவாரண நிதியும், 2 பயனாளிகளுக்கு ரூ.1.50 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து நிவாரணம் உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 23 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.96,500 வீதம் ரூ.22,19,500 மதிப்பீட்டிலும் என மொத்தம் 37 பயனாளிகளுக்கு ரூ.25,98,500 மதிப்பிட்டிலான நலத்திட்ட உதவிகளையும் மேலும், 50 அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திரு.மு.பாஸ்கரன், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் திருமதி மு.மகேஸ்வரி முருகேசன், திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.சக்திவேல், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் திருமதி ஹேமலதா மணிகண்டன், சின்னாளப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி பிரதீபா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திருமதி பத்மாவதி கணேசன், என்.பஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பாப்பாத்தி நாகராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் திருமதி கங்காதேவி, ஆத்தூர் வட்டாட்சியர் திரு.வடிவேல்முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.பா.குமரவேல், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.