Close

The Hon’ble Rural Development Minister Program – Batalagundu Town Panchayat

Publish Date : 07/04/2025
.

செ.வெ.எண்:-17/2025

நாள்:-06.04.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதுப்பட்டி மற்றும் காந்திநகரில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள், பழனி சட்டமன்ற உறுப்பினர் திரு.இ.பெ.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் ரூ.1.96 கோடி மதிப்பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதுப்பட்டி மற்றும் காந்திநகரில் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று(06.04.2025) திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில், மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு.இ.பெரியசாமி அவர்கள் தெரிவித்ததாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களுக்கும் சென்று சேரும் வகையில், மக்களுக்காகவே இந்த அரசு என்ற வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

இன்றைய தினம், வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் மூலதன மானிய நிதி 2024-2025 திட்டத்தின்கீழ் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டுதல் பணிகள் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் அறை, பொறியயில் பிரிவு அறை, அலுவலக அறைகள், துப்புரவு ஆய்வாளர் அறை, கணினி அறை, வரி வசூல் மையம், பதிவு வைப்பு அறை, வரவேற்பறை, கழிப்பறை ஆகிய அறைகள் 212 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளம், தலைவர் அறை, மன்றக் கூட்டம், கழிப்பறை ஆகிய அறைகள் 212 சதுர மீட்டர் பரப்பளவில் முதல் தளத்தளங்களுடன் கூடிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கும், மேலும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024-2025 கீழ் ரூ.71.49 இலட்சம் மதிப்பீட்டில் 8-வது வார்டு பில்டிங் சொசைட்டி தெருவில் சிமெண்ட் சாலை, வடிகால் சிறுபாலம் மற்றும் தடுப்புசுவர் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் லிமிட்டெட் நிறுவனத்தின் சார்பில் வழங்கப்பட்ட சி.எஸ்.ஆர் நிதி திட்டம் 2023-2024-ன்கீழ் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்-1 புதுப்பட்டியில் புதிய அங்கன்வாடி மையம் மற்றும் வார்டு எண்-2 காந்தி நகரில் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் ஆகிய முடிவுற்ற திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.35.41 கோடி மதிப்பீட்டில் குடிநீர் விநியோக பணிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வரப்படுகிறது. இப்பணிகள் 08.08.2025-ஆம் தேதியில் முடிவடையும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க 37.00 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.32.00 கோடி மதிப்பீட்டிலும், ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் வடிகால் அமைத்தல் பணிகளும் மேற்கொள்ள முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அம்ரூத் 2.0 திட்டம் முடிவடைந்தவுடன் மேற்காணும் திட்டபணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், அம்ரூத் 2.0 திட்டம் 2023-2024 கீழ் ரூ.3541.00 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் விநியோக அபிவிருத்தி பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-24 கீழ் ரூ.289.00 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தை அமைத்தல், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-24 கீழ் ரூ.149.00 மதிப்பீட்டில் மின்மயானம் அமைத்தல், 15வது நிதிக்குழு திட்டம் 2023-2024 கீழ் ரூ.49.00 மதிப்பீட்டில் 5 பணிகளும், அரசு பள்ளி மேம்பாட்டுத்திட்டம் 2022-23 கீழ் ரூ.24.10 இலட்சம் மதிப்பீட்டில் 1 பணிகள், நபார்டு நிதி உதவித்திட்டம் 2022-23 கீழ் ரூ.151.00 இலட்சம் மதிப்பீட்டில் 1 பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-24 கீழ் ரூ.15.00 இலட்சம் மதிப்பீட்டில் 10 பேட்டரி வாகனம், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-24 கீழ் ரூ.71.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள், தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2023-24 கீழ் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள், தூய்மை இந்தியா திட்டம் 2.0 2023-2024 கீழ் ரூ.43.00 இலட்சம் மதிப்பீட்டில் நச்சுத்தொட்டி சுத்தம் செய்யும் வாகனம், 15-வது நிதிக்குழு திட்டம் 2022-23 இரண்டாவது தவணை ரூ.53.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் குடிநீர் விநியோக பணிகள், நமக்கு நாமே திட்டம் 2022-23 கீழ் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள், 15-வது நிதிக்குழு திட்டம் 2022-23 முதல் தவணை ரூ.29.00 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் மற்றும் சாலை அமைக்கும் பணிகள், கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் 2022-2023 கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள், தூய்மை இந்தியா திட்டம் 2.0 2022-2023 கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மை பணிகள், அம்ரூத் 2.0 திட்டம் 2022-2023 கீழ் ரூ. 13.00 மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணிகள், 15வது நிதிக்குழு திட்டம் 2021-22 கீழ் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் சாலை, வடிகால் அமைத்தல் பணி மற்றும் குடிநீர் விநியோக பணிகள், பொதுநிதி பணிகள் கீழ் ரூ.94.38 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் அமைத்தல், குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் அமைத்தல் ஆகிய 68 பணிகள் 4887.97 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு எல்லாருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இவ்விழாவில், வத்தலக்குண்டு பேரூராட்சி தலைவர் திரு.பா.சிதம்பரம், துணைத் தலைவர் திரு.இரா.தர்மலிங்கம், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) திரு.இரா.ராஜா, வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் திரு.ஆ.சரவணக்குமார் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.