Close

Thiruvalluvar -Statue – Silver Jubilee

Publish Date : 11/12/2024

செ.வெ.எண்:-24/2024

நாள்:-10.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

அய்யன் திருவள்ளுவருக்கு 133 அடி உயர திருவுருவச் சிலை நிறுவப்பட்டு வெள்ளிவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் புகைப்படக் கண்காட்சி, திருக்குறள் கருத்தரங்கம், வினாடி-வினா, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடைபெறவுள்ளன – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

அய்யன் திருவள்ளுவர் அவர்களின் 133 அடி உயர திருவுருவச் சிலை 01.01.2000 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ள நிலையில் அதற்கான வெள்ளிவிழாவினைக் கொண்டாட 12.11.2024 அன்று நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தில் 23.12.2024 முதல் 31.12.2024 வரை திருவள்ளுவர் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு, திருக்குறளின் பெருமைகளை உணர்த்தும் நிகழ்ச்சிகள் நடத்துதல், திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தல், திருக்குறள் விளக்க உரைகளையும், திருக்குறள் தொடர்பான புகைப்படங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைத்து புகைப்பட கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

p class=”text-justify”>மேலும் 23.12.2024 முதல் 31.12.2024 வரை திண்டுக்கல் மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம் சார்பில் மாணவர்கள் மற்றும் நூலக வாசகர்களைக் கொண்டு திருக்குறள் கருத்தரங்கம், வினாடி-வினா போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக தலா ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000 மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.2,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மேலும் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் திண்டுக்கல் மாவட்ட மைய நூலகத்தை அணுகி போட்டிகளில் பங்கேற்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.