Close

TN Legislative Assembly – Public Undertaking Committee

Publish Date : 12/06/2025

செ.வெ.எண்:-27/2025

நாள்:-10.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில் 12.06.2025 மற்றும் 13.06.2025 ஆகிய நாட்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில், சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அதில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது நிறுவனங்கள் குழு(2024-2026), மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், 17 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர், திண்டுக்கல் மாவட்டத்தில் 12.06.2025 மற்றும் 13.06.2025 ஆகிய 2 நாட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்கள் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுநிறுவனங்கள் குழு உறுப்பினர்களான, மதிப்பீட்டுக்குழு தலைவர்(அலுவல் காரணமாக) வேடசந்துார் சட்டமன்ற உறுப்பினர் திரு.ச.காந்திராஜன், பொதுக்கணக்குக்குழுத் தலைவர் (அலுவல் காரணமாக) சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.க.அன்பழகன், திரு.க.அசோகன், திரு.எம்.எஸ்.எம்.ஆனந்தன், திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன், திரு.உடுமலை கே.இராதாகிருஷ்ணன், திரு.கடம்பூர் ராஜூ, திரு.மு.பெ.கிரி, திரு.ஆ.கோவிந்தசாமி, திரு.துரை.சந்திரசேகரன், திரு.ம.சிந்தனைசெல்வன், திரு.வி.பி.நாகைமாலி, திரு.ஒய்.பிரகாஷ், டாக்டர் சி.விஜயபாஸ்கர், திரு.த.வேலு, முனைவர் எம்.எச்.ஜவாகிருல்லா ஆகியோர் கொண்ட குழுவினர் ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

இந்தக் குழுவினர; 12.06.2025 அன்று திண்டுக்கல் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர். பின்னர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், திண்டுக்கல் மாவட்டம் தொடர்பான தணிக்கை பத்திகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளனர்.

பின்னர் இக்குழுவினர் 13.06.2025 அன்று கொடைக்கானல் நகராட்சி மருத்துவமனை மருந்தகம், கொடைக்கானல் நகராட்சி பகுதியில் மாசுக்கட்டுப்பாடு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து களஆய்வு மேற்கொள்கின்றனர்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.