Close

TNREGINET – Guidelines – Notification

Publish Date : 14/06/2024

செ.வெ.எண்:-24/2024

நாள்:-12.06.2024

திண்டுக்கல் மாவட்டம்

வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், மதிப்பீட்டு துணைக்குழுவிடம் தெரிவிக்கலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பினை சீரமைத்தல் தொடர்பாக இந்திய முத்திரைச்சட்டம் பிரிவு 47AA-ன் கீழான தமிழ்நாடு முத்திரை (சொத்துகளுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டி தயாரிக்க மதிப்பீடு செய்தல், வெளியிடுதல் மற்றும் திருத்தியமைத்தலுக்காக மதிப்பீட்டு குழு ஏற்படுத்துதல்) விதிகள் 2010, விதிகளில் விதி 4(2)-ன் படி மைய மதிப்பீட்டு குழு 26.04.2024-ல் நிர்ணயம் செய்த நெறிமுறை கோட்பாட்டிற்கு இணங்க திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வட்டாட்சியர், சார்பதிவாளர் அலுவலகங்கள் உட்பட முக்கிய அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் விவரங்கள் www.tnreginet.gov.in என்ற இணையதள முகவரியில் அனைவரும் தெரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மீது ஏதேனும் ஆட்சேபணைகள் மற்றும் கருத்துரைகள் இருப்பின், அதனை 15 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மதிப்பீட்டு துணைக்குழுவிடம் “மதிப்பீட்டு துணைக்குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திண்டுக்கல் மாவட்டம்“ என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பொதுமக்கள் அளிக்கலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.