TNSRLM – Mahalir Thittam – College Bazaar
செ.வெ.எண்:-14/2024
நாள்:-06.12.2024
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 11.12.2024 முதல் 13.12.2024 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை கல்லூரிகளில் சந்தைப்படுத்துதலுக்காக திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 11.12.2024 முதல் 13.12.2024 வரை கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி நடத்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் உற்பத்திப் பொருட்களான பேன்சி, கைவினைப் பொருட்கள், சின்னாளப்பட்டி சேலைகள், சிறுதானிய உணவுப் பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், மென்பொம்மைகள், கவரிங் பொருட்கள் விற்பனைக்கு வைத்திடும் வண்ணம் உரிய அரங்குகள் அமைக்கப்படவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கான கல்லூரி சந்தை விற்பனை கண்காட்சி திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் 11.12.2024 முதல் 13.12.2024 வரையிலான தேதிகளில் நடைபெறவுள்ளதால், இக்கண்காட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அதிகளவில் கலந்து கொண்டு உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதால், அதிகளவில் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.