TNSRLM SHG insurance
செ.வெ.எண்:-40/2025
நாள்:-12.05.2025
திண்டுக்கல் மாவட்டம்
பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் விபத்து மற்றும் இறப்பு போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருப்பதால், மேற்படி நபர்களை ஒன்றிய மற்றும் மாநில அரசின் காப்பீடு திட்டங்களில் இணைப்பது மிகவும் முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற ஏழை, எளிய குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர்களின் மரணத்தால் அல்லது ஏதாவது உடல் உறுப்பு இழப்பால் நிரந்தர வருவாய் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இப்பேரிழப்பிலிருந்து காப்பீடு செய்தவர் அல்லது குடும்பத்தினர் மீளவும், தொடர்ந்து தொழில்கள் புரிந்திடவும் காப்பீடு உதவுகிறது. ஆதலால் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே காப்பீடு திட்டங்கள் மற்றும் சமுதாய பாதுகாப்பு பயன்கள் பற்றிய விபரங்கள் முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதை பொருட்டு PMSBY, PMJJBY, CMCHIS / PMJAY மற்றும் APY ஆகிய காப்பீட்டு திட்டங்களில் தகுதியுள்ள அனைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பதிவு செய்யப்பட்ட அனைத்து மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மே 2025-ஆம் மாதத்திற்குள் காப்பீட்டை புதுப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.