TNSRLM – Signature Campaign on Gender Discrimination
செ.வெ.எண்:-64/2024
நாள்:-25.11.2024
திண்டுக்கல் மாவட்டம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின பாகுபாடு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின பாகுபாடு தொடர்பான கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் இன்று(25.11.2024) தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாலின பாகுபாடு தொடர்பான பிரச்சார விழிப்புணர்வு நிகழ்ச்சி 25.11.2024 முதல் 23.12.2024 வரை அனைத்து வட்டாரங்களிலும் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மற்றும் வட்டாரங்களில் பாலினம் தொடர்பான பிரச்சனைகளை களைவது குறித்த செயல்பாடுகளை ”ஒன்றிணைவோம் குரல் கொடுப்போம் வன்முறைக்கு எதிராக” பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தை தடுத்தல் போதை பொருள் பயன்பாடு, மது ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல், பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையிலிருந்து காத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்தல் உள்ளிட்ட தலைப்புகளில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன் தொடக்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் பாலின பாகுபாடு மற்றும் பெண்கள் வன்முறைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.