TNSRLM – Youth Skill Festival
செ.வெ.எண்:-36/2025
நாள்:-20.01.2025
திண்டுக்கல் மாவட்டம்
இளைஞர் திறன் திருவிழா 25.01.2025 அன்று நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள வேலையில்லா இளைஞர்கள் மற்றும் படித்த பெண்களுக்கு திறன் பயிற்சியை உருவாக்கி தரும் உயர்ந்த நோக்கத்துடன் மாவட்ட அளவில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழா 25.01.2025 அன்று காலை 09.00 மணி முதல் பிற்பகல் 04.00 வரை திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அதனடிப்படையில், மாவட்ட அளவில் நடைபெறும் இளைஞர் திறன் திருவிழாவில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர்கள் (ஆண் மற்றும் பெண்) 18 முதல் 35 வயதுக்குட்பட்ட 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் மற்றும் பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., பொறியியல் படிப்பு படித்தவர்கள் கலந்துகொள்ளலாம்.
இளைஞர் திறன் திருவிழா மூலம் தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவரவர் தகுதிக்கேற்ப பயிற்சிகள் வழங்கி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொள்பவர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை (அசல் மற்றும் நகல்கள்) சுய விவரக்குறிப்பு மற்றும் 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொண்டு பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.