Close

Tourism Addl chief secretary Inspection-Sirumalai

Publish Date : 12/05/2025
.

செ.வெ.எண்:-36/2025

நாள்:-10.05.2025

திண்டுக்கல் மாவட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், சிறுமலையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

சிறுமலை பகுதியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.கே.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்பேரில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.ஆர்.ராஜேந்திரன் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், திண்டுக்கல் மாவட்டம், சிறுமலையில் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார்கள்.

அதன்தொடர்ச்சியாக, சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மரு.கே.மணிவாசன், இ.ஆ.ப., அவர்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் சிறுமலை பகுதியில் இன்று(10.05.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிறுமலைப்புதுார், சிறுமலை அருவி, பாண்டியன் குளம், பல்லுயிர் பூங்கா உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, சிறுமலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். சிறுமலைப்பகுதியில் உள்ள சிறப்பு அம்சங்கள், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ள அம்சங்கள், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு வணிகள், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகள் ஆகியவற்றை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ஹ.கோவிந்தராஜ், சிறுமலை வனப்பாதுகாவலர் திரு.மதிவாணன், திண்டுக்கல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.ராஜேஷ், திரு.அண்ணாத்துரை, வனத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

.

.

.

.

.

.

.