TOWN PANCHAYAT
செ.வெ.எண்:-62/2025
நாள்:-25.10.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும் வருகின்ற 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் சிறப்பு வார்டு கூட்டம் நடைபெறவுள்ளது – மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளுக்குட்பட்ட வார்டுகளிலும் வருகின்ற 27.10.2025 முதல் 29.10.2025 வரை சிறப்பு வார்டு கூட்டம் நடைபெறவுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், அனைத்து பேரூராட்சிகளிலும் மன்ற வார்டு உறுப்பினர் தலைமையில் உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள பொதுமக்கள் பங்கேற்புடன் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்களை 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் நடத்திட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேற்படி, சிறப்பு வார்டு கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது வார்டு பகுதியில் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம் திடக்கழிவு மேலாண்மை தெருவிளக்கு பராமரிப்பு சாலை பழுதுகள் பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் மழை நீர் வடிகால் பராமரிப்பு போன்றவற்றில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மேற்படி சிறப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு எடுத்துரைக்கலாம்.
வார்டு பகுதி பொதுமக்களால் தெரிவிக்கப்படும் பிரதான மூன்று கோரிக்கைகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, சம்பந்தப்பட்ட வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.