Close

Treasury Review Meeting

Publish Date : 11/12/2024
.

செ.வெ.எண்:-27/2024

நாள்:-10.12.2024

திண்டுக்கல் மாவட்டம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கருவூலம் மற்றும் கணக்குத்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று(10.12.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு அரசில் பணிரிந்து வரும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து அரசு அலுவலர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் கருவூலக் கணக்குத்துறை மூலமாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டம்(IFHRMS) வழியாக உரிய நேரத்தில் கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின்(GPF) கீழ் ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய கருத்துரு இணைய வழியில் (OPPAS) மாநிலக் கணக்காயருக்கு அனுப்புவது, புதிய ஓய்வூதியத் திட்டத்தின்(CPS) கீழ் ஓய்வு பெறும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய கருத்துரு இணைய வழியில் அரசு தகவல் தொகுப்பு விவர மையத்திற்கு(GDC) அனுப்புவது, வருமானவரிச் சட்டம் 1961-இன் படி உரிய காலக்கெடுவுக்குள் 24Q, 26Q மற்றும் 27Q தொடர்பான விவரங்களை விரைந்து பதிவேற்றம் செய்திட அனைத்து பணம் பெற்றுவழங்கும் அலுவலர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதன் மூலம் காலதாமதத்தை தவிர்க்க முடியும், எனவே, ஓய்வுபெறும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய கருத்துரு இணைய வழியில் அனுப்பும் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.மு.கோட்டைக்குமார், மாவட்டக் கருவூல அலுவலர் திரு.மா.இராசு, அனைத்துத் துறை தலைமை அலுவலகங்களில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.