TREE PLANTATION
செ.வெ.எண்: 01/2025
நாள்: 01.11.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட செங்கட்டான் குளத்தில் நடைபெற்ற ”சங்க இயல் வனம்” துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டு, 100 வகையான மரவகைகள் மற்றும் பனவிதைகள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக இருந்ததை ”பசுமை தமிழக இயக்கம்” என்ற திட்டத்தின் மூலம் 33 சதவீதமாக உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட செங்கட்டான் குளத்தில் நடைபெற்ற ”சங்க இயல் வனம்” துவக்க விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.11.2025) கலந்து கொண்டு, 100 வகையான மரவகைகள் மற்றும் பனவிதைகள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழ்நாட்டின் வனப்பகுதி 23 சதவீதமாக இருந்ததை ”பசுமை தமிழக இயக்கம்” என்ற திட்டத்தின் மூலம் 33 சதவீதமாக உயர்த்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், VEFS FOUNDATION KAIFA ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாசன விவசாயிகள் சங்கம் இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ள ”சங்க இயல் வனம்” திட்டத்தின் கீழ் “செங்கட்டான் குளம், பாப்பா குளம், நிலக்கோட்டை மற்றும் பெரியகுளம் உள்ளிட்ட குளக்கரைகளில் பண்டைய கால சங்க இலக்கிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல குணங்களை உள்ளடக்கிய 100 வகையான மரவகைகள் மற்றும் பனவிதைகள் என மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்யும் பணிகள் சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் மாவட்டமாகும். நீர் மேலாண்மை குறித்து அறிவியல் ரீதியாகவும், தொன்மை ரீதியாகவும், வரலாற்றின் வாயிலாகவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டால் மட்டுமே விவசாயம் மற்றும் விவசாயிகளின் பொருளாதாரம் முன்னேற்றம் வளர்ச்சி பெறும். பழங்காலத்தில் இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் குளக்கரைகளில் மரக்கன்றுகளை நட்டு வைத்து வணங்கி வரும் வழக்கம் இருந்து வந்தது.
அதனடிப்படையில், இன்றைய தினம் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விளிம்பு நிலையிலுள்ள மரக்கன்றுகளை நட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் மூலம் நடப்படும் மரக்கன்றுகளை விவசாய பெருமக்களாகிய நீங்கள்தான் பாதுகாத்து வளர்க்க வேண்டும். மேலும், பழனி முருகன் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில்களில் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கடம்ப மரங்கள் நடப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், கொடைக்கானல் மற்றும் கேரளாவிற்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் இவ்வழியாகச் செல்வதால் இப்பகுதியினை மேம்படுத்தும் ஒரு பகுதியாக மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைக்கப்படுள்ளது.
மேலும், இனிவரும் காலங்களில் செங் கடம்பு, நீர் கடம்பு, நீர் மருது, இடலை, பனி வாகை, குடசபாலை, சோலை வேங்கன், போன்ற நூறுக்கும் மேற்பட்ட மரவகைகளை 1000 என்கின்ற எண்ணிக்கையில் நடவு செய்யபடவுள்ளது. மேலும், இம்மரக்கன்றுகளை பள்ளி மாணவர்கள், பெரியவர்கள் ஆகியோர்களைக் கொண்டு நட்டு வைக்கலாம். இவர்களை வைத்து மரக்கன்றுகளை நடும்போது அம்மரத்திற்கு வலிமை கூடுதலாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பசுமை தோழி செல்வி.ஜெ.லேகாவர்ஷினி, நீர்வளத்துறை செயற்பொறியாளர் திரு.சு.சரவணன், வத்தலகுண்டு உதவிப் பொறியாளர் (ஊ.வ) திரு. ச. குபேந்திரன், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் திரு.ஆ. தமிழ்ச்செல்வன், நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் திரு.ப. மோகன்தாஸ், வத்தலக்குண்டு உதவி செயற் பொறியாளர் (ஊ.வ) திரு.ரா. விவேகானந்தன், வத்தலக்குண்டு வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.ப.முருகேசன், ஒன்றிய பொறியாளர் திரு. பி. செல்வகுமார் அவர்கள் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.

.

Oplus_16908288

.