Close

UAL Publications

Publish Date : 01/07/2025

செ.வெ.எண்:-113/2025

நாள்:-30.06.2025

திண்டுக்கல் மாவட்டம்

பத்திரிக்கை செய்தி

2025-2026-ம் ஆண்டிற்கான சட்டப்பேரவை மானிய கோரிக்கையின் போது மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்பற வளா்ச்சித் துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண் 5-ல் ”20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்டுள்ள தனிமனைகளுக்கு எந்த காலகெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும்” என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொது மக்கள் பயன்பெறும் வகையில் 01.07.2025 முதல் www.onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் பதிவு செய்யலாம்.

மேலும் அனுமதியற்ற மனைப்பிரிவு வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் அமைக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 30.06.2026 வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்து 15.05.2025 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை எண் 70 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2025 முதல் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இது போன்று மலையிடப்பகுதிகளில் உள்ள அங்கிகரிக்கப்படா மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை www.tnhillarealayoutreg.in என்ற இணையதளத்திற்கு பதிலாக 01.07.2025 முதல் 30.11.2025 வரை www.tcponline.tn,gov.in என்ற இணையதளம் வாயிலாகவே தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இயக்குநர், நகர் ஊரமைப்பு இயக்ககம், இ மற்றும் சி மார்க்கெட் சாலை, சிஎம்டிஏ வளாகம் வளாகம்,3 ஆம் தளம், கோயம்பேடு சென்னை-600 107.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.