Ungaludan Stalin
செ.வெ.எண்:-50/2025
நாள்:-12.07.2025
திண்டுக்கல் மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முதல் கட்ட முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் மாவட்ட ஆட்சித்தலைர் திரு.செ.சரவணன்இ.ஆ.ப., அவர்கள் தகவல்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் துவங்கப்படுகிறது. இந்த திட்டமானது ஜூலை 15 ம் தேதி முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும். இத்திட்டத்தின்கீழ் நடத்தப்படும் முதல் முகாமினை வருகிற 15.07.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
அதனடிப்படையில், திண்டுக்கல் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டம் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் 360 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல்கட்டமாக 112 முகாம்கள் வருகிற 15.07.2025-ல் தொடங்கி 14.08.2025 வரை நடைபெறும். இரண்டாம் கட்டமாக 96 முகாம்கள் 15.08.2025 முதல் 14.09.2025 வரை நடைபெறும். மூன்றாம் கட்டமாக 89 முகாம்கள் 15.09.2025 முதல் 14.10.2025 வரை நடைபெறும் மற்றும் நான்காம் கட்டமாக 63 முகாம்கள் 15.10.2025 முதல் 14.11.2025 வரை நடைபெறும்.
தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத்துறையின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனை பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இத்திட்டத்தின்கீழ் தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் / சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்குவர்.
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடுவீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி, 07.07.2025-ம் தேதி அன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்தப்பணி மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கீழ் கண்ட பட்டியல்படி “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் முதல் கட்ட முகாம் நடைபெறவுள்ளது.
| வ. எண் | முகாம் நடக்கும் தேதி | நகர்புற / கிராமப் பஞ்சாயத்துகள் பெயர் | வார்டு மற்றும் கிராம பஞ்சாயத்துகள் விபரம் |
முகாம் நடக்கும் இடங்கள் |
| 1 | 15.07.2025 | ஊரகம் | வேடசந்தூர் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வேடசந்தூர் |
| ஊரகம் | ஆத்தூர் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆத்தூர் | ||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி – வார்டு1, வார்டு 2 | தரகு மண்டி குமாஸ்தாக்கல் சங்கம் மண்டபம், நந்தவனம் ரோடு | ||
| நகர்புறம் | ஒட்டன்சத்திரம் நகராட்சி – வார்டு1,வார்டு 6 | திருமண மண்டபம், ஏ.பி.பி.நகர், ஒட்டன்சத்திரம் | ||
| நகர்புறம் | நகர்புற பஞ்சாயத்து முள்ளிப்பாடி | ஊராட்சி அலுவலகம், முள்ளிப்பாடி | ||
| 2 | 16.07.2025 | ஊரகம் | வத்தலக்குண்டு | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எழுவனம்பட்டி |
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு3, வார்டு 4 | சமுதாயகூடம், ஈ.வி.ஆர் சாலை, ஆர்.எம்.காலணி | ||
| நகர்புறம் | கொடைக்கானல் நகராட்சி வார்டு-1,2 | அப்சர்வேட்ரி நகராட்சி துவக்கப்பள்ளி, கொடைக்கானல். | ||
| நகர்புறம் | நகர்புற பஞ்சாயத்து குரும்பபட்டி |
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குரும்பபட்டி | ||
| நகர்புறம் | ய்யலூர் பேருராட்சி வார்டு 1 to 7 |
சந்தைபேட்டை எம்.பி மஹால், அய்யலூர் | ||
| நகர்புறம் | நத்தம் பேருராட்சி வார்டு 1 to 9 |
துரைகமலம் அரசு உயர்நிலைப்பள்ளி, நத்தம் | ||
| 3 | 17.07.2025 | ஊரகம் | வேடசந்தூர் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கோவிலூர் |
| ஊரகம் | நிலக்கோட்டை | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எத்திலோடு | ||
| நகர்புறம் | பழனி நகராட்சி வார்டு-15 மற்றும் 17 |
நகராட்சி சமுதாயகூடம், எம்.எல்.ஏஅலுவலகம் பின்புறம், பழனி | ||
| நகர்புறம் | நகர்புற பஞ்சாயத்து-செட்டிநாயக்கன்பட்டி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, செட்டிநாயக்கன்பட்டி | ||
| நகர்புறம் | பாளையம் பேருராட்சி வார்டு 1 முதல் 7 வரை |
ஆயிரவைசிய கல்யானமண்டபம் முத்தம்பட்டி | ||
| நகர்புறம் | சித்தையன் கோட்டை பேருராட்சி வார்டு 1 முதல் 9 வரை |
மூக்கப்பிள்ளை திருமணமண்டபம் சித்தையன்கோட்டை | ||
| 4 | 18.07.2025 | ஊரகம் | வேடசந்தூர் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மாரம்பாடி |
| ஊரகம் | குஜிலியம்பாறை | VSK திருமணமண்டபம், புளியம்பட்டி | ||
| நகர்புறம் | ஒட்டன்சத்திரம் நகராட்சி வார்டு- 2 மற்றும் 3 |
உழவர் சந்தை, ஒட்டன்சத்திரம் |
||
| நகர்புறம் | நகர்புற பஞ்சாயத்து பள்ளபட்டி |
ஊராட்சி அலுவலகம், பள்ளபட்டி | ||
| நகர்புறம் | பண்னைக்காடு பேருராட்சி வார்டு-1 முதல் 8 வரை | அரசு மேல்நிலைப்பள்ளி, பண்ணைகாடு | ||
| நகர்புறம் | தாடிக்கொம்பு பேருராட்சி – வாரடு 1 முதல் 8 வரை | புனித சந்தியாகாப்பர் கோவில் சமுதாயகூடம், மரவபட்டி | ||
| 5 | 22.07.2025 | ஊரகம் | பழனி | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அ.கலையம்புதூர் |
| ஊரகம் | திண்டுக்கல் | ஊராட்சி அலுவலகம், பெரியகோட்டை | ||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 5,6 |
TMSS அரங்கம், ஜான்பால்பள்ளி, நேருஜிநகர் | ||
| நகர்புறம் | நகர்புற பஞ்சாயத்து சீலப்பாடி |
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சீலப்பாடி | ||
| நகர்புறம் | எரியோடு பேருராட்சி வார்டு 1 முதல்7 வார்டு 12 |
பாலுமஹால். 12-வது வார்டு, எரியோடு. |
||
| நகர்புறம் | பட்டிவீரன்பட்டி பேருராட்சி வார்டு- 1 முதல் 6 வரை மற்றும் வார்டு 8 |
காமராஜர் திருமணமஹால், பட்டிவீரன்பட்டி | ||
| 6 | 23.07.2025 | ஊரகம் | வடமதுரை | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மோரிபட்டி |
| ஊரகம் | ஆத்தூர் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஆத்தூர் | ||
| ஊரகம் | குஜிலியம்பாறை | கொங்குநாடுகல்லூரி, டி.கூடலூா். | ||
| நகர்புறம் | கொடைக்கானல் நகராட்சி – வார்டு – 3,9,10 | அப்சர்வேட்ரி நகராட்சி துவக்கப்பள்ளி, கொடைக்கானல். | ||
| நகர்புறம் | நகர்புறம் பஞ்சாயத்து தோட்டனூத்து |
ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஆர்.எம்.டி.சி நகர் தோட்டனூத்து |
||
| நகர்புறம் | கீரனூர் பேருராட்சி வார்டு -01-8 |
பேரூராட்சி சமூதாயகூடம், கீரனூர் | ||
| 7 | 24.07.2025 | ஊரகம் | நத்தம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆவிச்சிபட்டி |
| ஊரகம் | கொடைக்கானல் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , பூம்பாறை |
||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 7-8 |
சைவ பெருமக்கள் பேரவை, மேற்கு கோவிந்தாபுரம் மெயின்ரோடு | ||
| நகர்புறம் | ஒட்டன்சத்திரம் நகராட்சி வார்டு – 10,11,12 | பாரிமஹால், திண்டுக்கல் மெயின் ரோடு, ஒட்டன்சத்திரம் | ||
| நகர்புறம் | நகர்புறம் பிள்ளையார் நத்தம் | சமுதாயகூடம், பிள்ளையார் நத்தம் |
||
| நகர்புறம் | அம்மையநாயக்கனூர் பேருராட்சி வார்டு 1 To 6 |
சமுதாயகூடம் நாகயகவுண்டன்பட்டி | ||
| 8 | 25.07.2025 | ஊரகம் | பழனி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆண்டிபட்டி |
| ஊரகம் | வத்தலக்குண்டு | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோட்டைபட்டி |
||
| ஊரகம் | ஒட்டன்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி , அம்பிளிக்கை |
||
| ஊரகம் | ரெட்டியார்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆடலூர் |
||
| நகர்புறம் | சின்னாளபட்டி பேருராட்சி வார்டு-01-5 |
சமுதாயகூடம் சின்னாளபட்டி | ||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 9,10 |
ராஜகலாமண்டபம், EVR ரோடு, ஆர்.எம்.காலனி |
||
| 9 | 29.07.2025 | ஊரகம் | நத்தம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குடகுபட்டி |
| ஊரகம் | நிலக்கோட்டை | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கோடாங்கிநாயக்கன்பட்டி |
||
| ஊரகம் | பழனி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சித்திரைகுளம் | ||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 11,12 | மாநகராட்சி அலுவலகம், திண்டுக்கல் | ||
| நகர்புறம் | கொடைக்கானல் நகராட்சி வார்டு-4-5 | P.C.K மேல் நிலைப்பள்ளி, நாயுடுபுரம் | ||
| நகர்புறம் | அகரம் பேருராட்சி வார்டு- 1 to 8 |
அரசு மேல்நிலைப்பள்ளி, அகரம் |
||
| 10 | 30.07.2025 | ஊரகம் | ஒட்டன்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஐ.வாடிபட்டி |
| ஊரகம் | வத்தலக்குண்டு | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மல்லணம்பட்டி | ||
| ஊரகம் | கொடைக்கானல் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அடுக்கம் | ||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 13-14 |
ஸ்ரீநிதி திருமணமண்டபம், சிலுவத்தூர் ரோடு | ||
| நகர்புறம் | பழனி நகராட்சி வார்டு -7-8 |
மல்லிமடம், பழனி | ||
| நகர்புறம் | ஸ்ரீராமபுரம் பேருராட்சி வார்டு 1-11 |
அரசு மேல்நிலைப்பள்ளி திருமலைராயபுரம் | ||
| 11 | 31.07.2025 | ஊரகம் | திண்டுக்கல் | ஊராட்சி அலுவலகம், தாமரைப்பாடி |
| ஊரகம் | ஆத்தூர் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தேவரப்பன்பட்டி | ||
| ஊரகம் | வடமதுரை | அரசு மேல்நிலைப்பள்ளி, வேல்வார்கோட்டை | ||
| ஊரகம் | தொப்பம்பட்டி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, 16 புதூர் | ||
| நகர்புறம் | கொடைக்கானல் நகராட்சி வார்டு-6,7,13 | பி.சி.கே மேல்நிலைப்பள்ளி, நாயுடுபுரம் | ||
| நகர்புறம் | கன்னிவாடி பேருராட்சி வார்டு-01-8 |
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கன்னிவாடி | ||
| 12 | 01.08.2025 | ஊரகம் | நத்தம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, முலையூர் |
| ஊரகம் | நிலக்கோட்டை | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மாலையகவுண்டன்பட்டி | ||
| ஊரகம் | பழனி | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காவலபட்டி | ||
| ஊரகம் | ரெட்டியார்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நடுப்பட்டி | ||
| ஊரகம் | சாணார்பட்டி | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அஞ்சுகுளிபட்டி | ||
| ஊரகம் | குஜிலியம்பாறை | வாணிமஹால், மல்லபுரம் | ||
| 13 | 05.08.2025 | ஊரகம் | ரெட்டியார்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கசவனம்பட்டி |
| ஊரகம் | ஒட்டன்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மண்டவாடி | ||
| ஊரகம் | வத்தலக்குண்டு | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, விராலிபட்டி | ||
| ஊரகம் | நத்தம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புன்னபட்டி | ||
| ஊரகம் | சாணார்பட்டி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கம்பிளியம்பட்டி | ||
| நகர்புறம் | பழனி நகராட்சி வார்டு – 22,23 |
நகராட்சி நடுநிலைப்பள்ளி, கடைவீதி, பழனி | ||
| 14 | 6.08.2025 | ஊரகம் | வடமதுரை | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பிளாத்து |
| ஊரகம் | தொப்பம்பட்டி | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கொத்தையம் | ||
| ஊரகம் | ஆத்தூர் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கலிக்கம்பட்டி | ||
| ஊரகம் | நிலக்கோட்டை | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பச்சமலையான்கோட்டை | ||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 15,16 |
லயன்ஸ் கிளப் ஜி.டி.என் சாலை | ||
| 15 | 7.08.2025 | ஊரகம் | கொடைக்கானல் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கே.சி.பட்டி |
| ஊரகம் | குஜிலியம்பாறை | வாணிமஹால் மல்லபுரம் | ||
| ஊரகம் | பழனி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாப்பம்பட்டி | ||
| ஊரகம் | வேடசந்தூர் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நத்தபட்டி | ||
| ஊரகம் | நத்தம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சேத்தூர். | ||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 17,18 |
லயன்ஸ் கிளப் ஜி.டி.என் சாலை | ||
| 16 | 8.08.2025 | ஊரகம் | குஜிலியம்பாறை | அரசு மேல்நிலைப்பள்ளி, ஆர்.வெள்ளோடு |
| ஊரகம் | ரெட்டியார்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குட்டத்துப்பட்டி | ||
| ஊரகம் | வத்தலக்குண்டு | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செங்கட்டாம்பட்டி | ||
| ஊரகம் | சாணார்பட்டி | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, செங்குறிச்சி | ||
| ஊரகம் | தொப்பம்பட்டி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மிடப்பாடி | ||
| நகர்புறம் | வேடசந்தூர் பேருராட்சி வார்டு -1, 2, 3, 4, 5, 6, 11, 12, 13 |
வாசவி மஹல் வேடசந்தூர் |
||
| 17 | 12.08.2025 | ஊரகம் | நிலக்கோட்டை | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பிள்ளையார் நத்தம் |
| ஊரகம் | ஒட்டன்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிந்தலவாடம்பட்டி | ||
| ஊரகம் | பழனி | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிவகிரிபட்டி | ||
| ஊரகம் | ரெட்டியார்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நீலமலைக்கோட்டை | ||
| ஊரகம் | சாணார்பட்டி | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பஞ்சம்பட்டி | ||
| ஊரகம் | வடமதுரை | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சித்துவார்பட்டி | ||
| 18 | 13.08.2025 | ஊரகம் | தொப்பம்பட்டி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சிக்கமநாயக்கன்பட்டி |
| ஊரகம் | நத்தம் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, சிறுகுடி | ||
| ஊரகம் | வேடசந்தூர் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, தட்டாரபட்டி | ||
| ஊரகம் | வத்தலக்குண்டு-SC /ST | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பழைய வத்தலகுண்டு |
||
| நகர்புறம் | திண்டுக்கல் மாநகராட்சி வார்டு 19,20 |
நாயுடு மஹஜனமண்டபம், ரவுண்டு ரோடு | ||
| 19 | 14.08.2025 | ஊரகம் | கொடைக்கானல் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வில்பட்டி |
| ஊரகம் | ஆத்தூர் | ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பாளையங்கோட்டை | ||
| ஊரகம் | நிலக்கோட்டை | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சித்தர்கள் நத்தம். | ||
| ஊரகம் | ரெட்டியார்சத்திரம் | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பொன்மான்துரை | ||
| ஊரகம் | சாணார்பட்டி | ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வி.எஸ்.கோட்டை. | ||
| நகர்புறம் | பழனி நகராட்சி வார்டு- 24,25 |
சேனைதலையார்மடம், கோட்டைமேடு தெரு, பழனி |
எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் மேல் கண்ட பட்டியல்படி நடைபெறவுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முதல் கட்ட முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைர் திரு.செ.சரவணன்இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.