Close

World TB Day – Awareness

Publish Date : 25/03/2025
.

செ.வெ.எண்:-63/2023

நாள்: 24.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல்லில் காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், உலக காசநோய் தினத்தை(மார்ச் 24-ஆம் தேதி) முன்னிட்டு, காசநோய் ஒழிப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து, விழிப்புணர்வு பலுானை பறக்க விட்டு, மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் இன்று(24.03.3025) தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணியானது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி, தலைமை தபால் அலுவலகம், பேருந்து நிலையம் வழியாக மீண்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் அரசு, தனியார் செவிலியர் கல்லுாரி மாணவிகள் மற்றும் ராஜன் ஸ்போர்ட்ஸ் கிளப் மூலமாக 50 மாணவர்கள் ஸ்கேட்டிங்கில் காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி, சிறப்பாக செயல்பட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் மரு.ஆர்.சுகந்திராஜகுமாரி, நுண்ணுயிரியல் துறை தலைவர் மரு.ஜெ.சூர்யாகுமார், இணை இயக்குநர்(நலப்பணிகள்) மரு.ஆர்.பூமிநாதன், மருத்துவப் பணிகள் துணை இயக்குநர்(காசநோய்) மருஎம்.முத்துப்பாண்டியன், துணை இயக்குநர்(நலப்பணிகள்- பழனி) மரு.அனிதா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.