Close

World Water Day Grama sabha

Publish Date : 18/03/2025

செ.வெ.எண்:-47/2025

நாள்:-17.03.2025

திண்டுக்கல் மாவட்டம்

அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று நடைபெற உள்ளது – மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் 23.03.2025 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது.

உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், கலைஞர் கனவு இல்லம் 2025-2026 பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

எனவே, திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தவறாது கலந்து கொண்டு விவாதத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தி வெளியீடு:- செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், திண்டுக்கல்.